பா.ஜ., மாவட்ட தலைவர்கள் யார் இன்று வெளியீடு
சென்னை:தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. பின், நவம்பரில், உள்கட்சி தேர்தல் துவங்கியது. முதல் கட்டமாக, கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.அடுத்து, மண்டல தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. முதல் கட்டமாக, 33 மாவட்ட தலைவர்கள் பட்டியல், இன்று மதியம் 3:00 மணிக்குவெளியாகிறது.ஜன. 20ம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து, மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.