உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மலை மலைச்சரிவு, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார்? அரசிடம் பட்டியல் கேட்கிறது ஐகோர்ட்

தி.மலை மலைச்சரிவு, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார்? அரசிடம் பட்டியல் கேட்கிறது ஐகோர்ட்

சென்னை: திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிரிவல பாதையில் உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் தாமரை குளத்தின் நான்கு பக்கங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. கடந்த விசாரணையின் போது, ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விபரங்களுடன் இக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகி, 'கண்காணிப்பு குழு அறிக்கையின்படி, திருவண்ணாமலையில் அடையாளம் காணப்பட்டு உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 'நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றனர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, “மலை சரிவில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஓடைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து நீதிபதிகள், 'ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைச்சரிவு மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பட்டியலை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை நவ., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Poochi Ram
அக் 25, 2025 16:20

திருவண்ணாமலைல ஷண்முகா ஸ்கூல் எதிர்ல இருக்குற அரசு நூலகம் ஒரு குளம் அதை மூடி நூலகம் கட்டிவிட்டார்கள் அதே போல ஷண்முகா நுழைவு வாயிளுக்கு வலதுபுறம் ஒரு குளம் அதை மூடி வாகன பார்க்குமிடமாக மாத்தி விட்டார்கள்,


ram
அக் 25, 2025 11:55

சென்னையில் இருக்கும் சிறு சிறு குட்டைகள் குளங்கள் திருட்டு திமுக ஆட்களால் மூட படுகிறது, நங்கநல்லூர் ஏழூர் அம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் குளத்தை மூடி விட்டார்கள்.


Rathna
அக் 25, 2025 11:51

கவுன்சிலர், வட்ட மாவட்டங்களின், அரசு அதிகாரிகளின் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மலையையே கொள்ளை அடித்து ஏற்றுமதி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆறு, கடல் மணல் - கனிமங்கள் வரிசையில் இதுவும் சேரும்.


Muralidharan S
அக் 25, 2025 09:42

வேறு யார் ஆக்கிரமிப்புகளை செய்ய முடியும் ??? திராவிஷ கட்சிகள்தான்.. மற்றும் திராவிஷா கட்சிகளின் ஆதரவில் செழித்து வளரும் கட்டப்பஞ்சாயத்து- ரவுடி-குண்டர்களின் கும்பல்கள்தான்.. திருவண்ணாமலையில் மட்டும் அல்ல... தமிழகம் முழுவதும் ஆக்ரமித்து அராஜகம் செய்கிறார்கள்.. சென்னை நகரத்தின் மையப்போகுதியில் இருக்கும் வீட்டின் கேட் முன்பு நடைபாதை காய்கறி கடை பரப்பி வைத்து காலி செய்ய மறுக்கிறார்கள்.. சாதாரண பொதுமக்கள் தட்டி கேட்க முடியாத அசாதாரண / அச்சுறுத்தல் சூழ்நிலை நிலவுகிறது.. ரவுடி கும்பல்களின் அராஜகம் திராவிட ஆட்சிகளில் நாளுக்கு நாள் அதிகமாகவே செய்கிறது.. காட்டுதர்பார் நடக்கிறது...


Raja k
அக் 25, 2025 09:06

தி. மலையை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களையும் அப்புறபடுத்த வேண்டும், எக்ுசக்கமான வீடுகள், கடைகள் என்று ஏகபோகத்துக்கு பட்டா போட்டுகொண்டனர், அதுமட்டும் இல்லாமல் வருமானம் தேடி கொள்ள, மக்களை ஏமாற்ற நிறைய மடங்கள், சமாதிகள் என்று பலரும் கிளைபரப்பியுள்ளனர், ஆசிரமத்தை கோயில் கட்டுபாட்டில் எடுத்து கொள்ள வேண்டும்,


M S RAGHUNATHAN
அக் 25, 2025 08:55

எப்ப, எப்படி பதில் சொல்வது எங்கள் உரிமை. அதில் தலையிடக் கூடாது. சும்மா அந்த அதிகாரி, இந்த அதிகாரி ஆகியோரை நீதி மன்றத்திற்கு வரச் சொல்லக் கூடாது.


GMM
அக் 25, 2025 08:03

தி.மலை சுற்றுப்புறம் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்காணிப்பு, பட்டியல், விசாரணை... கண்டு அஞ்ச கூடியவர் அல்ல திராவிடர். முன்பு பள்ளிக்கு தாமதம் என்றால் பிரம்படி. ஒரு ஆசிரியர் கட்டுபாட்டில் பல ஆயிரம் மாணவர்கள். தற்போது தலைமை நீதிபதி பாதி நாட்கள் கல்லூரி கட் என்று பேட்டி. ? பட்டா இல்லாத ஆக்கிரமிப்பு இடம், அரசு பணத்தில் இலவசம் பெறுபவர் வாக்காளர் அடையாளம் நிறுத்தினால் 24 மணி நேரத்தில் அகற்ற முடியும். வாக்களிப்பு கட்டாயம் இல்லை. நேட்டோ உண்டு. ஆக்கிரமிப்பு வாக்கு எண் நிறுத்தினால் ஜனநாயகம் பாதிக்குமா? இல்லை. பின் ஏன் இந்த நாடகம்.


KOVAIKARAN
அக் 25, 2025 07:59

பொது ஓடைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டிய ஆக்கிரமக்காரர்களே, எதற்கும் பயப்படதீர்கள். தைரியமாக இருங்கள், உங்களுடைய ஆக்கிரமிப்புக்கு எந்தவித ஆபத்தும் வராது என்று கூறத்தோன்றுகிறது.


Ramesh Sargam
அக் 25, 2025 07:28

விசாரணையை நவ., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். உடனே நாம் இந்த வழக்கு அன்றைக்கே முடிவுக்கு வந்து தீர்ப்பும் கிடைக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. அன்று ஒரு சில விசாரணைக்குப்பின் மீண்டும் விசாரணை வேறு ஒரு தேதிக்கு தள்ளிபோடப்படும்.


duruvasar
அக் 25, 2025 12:16

விரிவான பட்டியல் தர அரசு தரப்பு 6 மாதம் கால அவகாசம் கேட்கும். நீதியை நிலைநாட்ட நீதிமன்றமும் கேட்ட அவகாசத்தை தருவார்கள்.


Field Marshal
அக் 25, 2025 07:00

ஆக்கிரமிப்பு ஒரே நாளில் நடக்கவில்லை ..சென்னையில் தான் ஆக்கிரமிப்பு என்று நினைத்தால் அங்கிங்கெனாதபடி ..செக்குலர் ஆக்கிரமிப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை