உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது? என்கவுன்டர் பற்றி நீதிபதி சரமாரி கேள்வி!

உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது? என்கவுன்டர் பற்றி நீதிபதி சரமாரி கேள்வி!

மதுரை : 'பாதுகாப்பிற்காக தான் போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது?' என, ரவுடி வெள்ளை காளி சகோதரி தொடர்ந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.திருச்சி, குண்டூர் சத்தியஜோதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:என் சகோதரர் வெள்ளை காளி, 2019 முதல், சென்னை புழல் சிறையில் கைதியாக உள்ளார். மதுரையில் ரவுடி கிளாமர் காளி கொலை செய்யப்பட்டார்; அந்த வழக்கில் வெள்ளை காளியின் பெயரை சேர்த்தனர். இந்த கொலைக்கும், அவருக்கும் தொடர்பில்லை.எதிர்தரப்பைச் சேர்ந்த வி.கே.குருசாமி, ஆளுங்கட்சியில் உள்ளார். இதனால் கிளாமர் காளி கொலை வழக்கில் கைதான எங்கள் உறவினர் சுபாஷ் சந்திரபோஸை, போலீசார் என்கவுன்டரில் கொன்றனர்.சிறையிலிருந்து வெள்ளை காளியை போலீசார் விசாரணைக்கு அழைத்து வரும்போது, சட்டவிரோதமாக என்கவுன்டர் செய்ய வாய்ப்புள்ளது; அவரை பாதுகாக்க வேண்டும். சிறையிலிருந்தவாறே காணொலியில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்.'அவரை போலீஸ் காவலில் எடுக்கும் போது, அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சத்தியஜோதி, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அரசு தரப்பு, 'வெள்ளை காளி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் கிளாமர் காளி கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளார். என்கவுன்டர் செய்ய உள்ளதாகக் கூறுவது தவறானது' என, தெரிவிக்கப்பட்டது.நீதிபதி, 'பாதுகாப்பிற்காக தான் போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக என்கவுன்டர்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளி தப்பி ஓடினால், முழங்காலுக்கு கீழே சுட்டுப் பிடிக்கலாம். திட்டமிட்டு ஒரு உயிரை பறிக்கும் அதிகாரத்தை யார் வழங்கியது? வேலியே பயிரை மேய்வதுபோல் உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும் என்கவுன்டர் தான் தீர்வா?' என, கேள்வி எழுப்பினார். பின்னர், டி.ஜி.பி., மற்றும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏப்., 29க்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

sasikumaren
ஏப் 19, 2025 16:34

அப்பாவி மக்கள் உயிரை கொன்று போடும் அரக்கர்களுக்கு வேறு எப்படி தண்டனை தர வேண்டும்


theruvasagan
ஏப் 18, 2025 17:39

அரசியல்வியாதிகளின் மீது போடப்பட்ட ஊழல் கேசுகளையும் சாமானிய மக்கள் நியாயம் கிடைக்க போடுகிற சிவில் வழக்குகளையும் தீர்ப்பு சொல்லாமல் 10 வருடம் 20 வருடம் இழுத்தடிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்.


Kulandai kannan
ஏப் 18, 2025 16:43

டிரம்ப் மாதிரி ஒரு சர்வாதிகாரி இந்தியாவுக்குத் தேவை


ராஜமோகன்.V
ஏப் 18, 2025 14:57

இதுவரை வெள்ளை காளி செய்த கொலைகளுக்கு அதிகாரம் கொடுத்தது சாட்சாத் இதே நீதிமன்றம்தான், இதே போன்ற நீதிபதிதான். கொலையாளிக்களுக்கு வக்காலத்து வாங்குது நீதிமன்றம். கொலையாளிகளுக்கு நீங்க தூக்கு தண்டனை கொடுத்தா போலீஸ் ஏன் என்கவுண்டர் செய்யப்பபோறாங்க..?


sampath surya
ஏப் 18, 2025 14:21

இந்த மாதிரி 1 பதில் இருப்பதால்தான் நாடு கூறு கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது, குற்றம் செய்தவனுக்கு அதிகப்பட்சத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்....


Barakat Ali
ஏப் 18, 2025 13:59

என்கவுன்ட்டர் போடாதீங்க... மக்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும்.. இதுதான் கோர்ட்டாரின் விருப்பமா ????


Sudha
ஏப் 18, 2025 13:50

உயிரை பறிக்கும் அதிகாரம்- காளியை கேட்க வேண்டும்


MUTHU
ஏப் 18, 2025 13:17

இங்கே கவர்னர் அதிகாரம் அரசிடம் செல்லாததுபோல், நீதிபதி அதிகாரம் உள்ளூர் போலீஸிடம் செல்லாது.


Padmasridharan
ஏப் 18, 2025 12:56

நிறைய காவலர்கள், நிறைய குற்றங்கள். துப்பாக்கி கொடுத்ததனால encounter ஏன்னா காக்கி சட்டையை பயன்படுத்தி அதட்டி மொதல்ல பணம் புடுங்கறாங்க. பின்னர் மிரட்டி பாலியல் தொல்லைகள் கொடுக்கிறாங்க. பெரிய குற்றங்களை மறைக்கிறாங்க.. கண்டுபிடிச்சா Transfer / Suspension கொடுப்பாங்க. டிஸ்மிஸ் கொடுத்து தண்டனை கொடுத்தா இவங்களுக்கும் புத்தி வந்து ஒழுங்கா வேலைய பார்ப்பாங்க


vijai hindu
ஏப் 18, 2025 11:35

ஒரு நாளைக்கு நீதிபதிக்கு பாதுகாப்புகளுக்கு போலீஸ் காவல் இல்லன்னா நிம்மதியா நீங்க இருக்க முடியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை