உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுத படிக்க தெரியாதவர் யார்? ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு

எழுத படிக்க தெரியாதவர் யார்? ஒரு வாரத்தில் கணக்கெடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எழுதப் படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டோர் விபரங்களை சேகரிக்கும் பணிகளை, ஒரு வாரத்தில் துவங்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி பிரிவு இயக்குனர் நாகராஜ முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணி, மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்டத்தில், கிராம அளவில் எழுத, படிக்க தெரியாதவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணிகளை, மே முதல் வாரத்தில் துவங்க வேண்டும். இதற்கு பள்ளி, கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற, கல்வி சாரா இணை அமைப்புகளில் பங்கேற்றுள்ள மாணவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களையும், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஏப் 27, 2024 15:54

பாஜக ஆட்சியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுத,படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் படித்தவர்கள் அவ்வளவு தான்!


Indhuindian
ஏப் 27, 2024 10:18

ஏஷுதி கொடுத்ததை படிக்கத்தெரியாதவங்களை பதியும் ஒரு கணக்கெடுப்பு எடுங்க


Barakat Ali
ஏப் 27, 2024 09:19

துண்டுச்சீட்டு வீட்டில் இருந்து ஆரம்பிங்க


Duruvesan
ஏப் 27, 2024 06:47

ஆக தப்பு தப்பா படிக்கும் விடியல் சார் போல ஆட்கள் எந்த லிஸ்ட்ல வருவாங்கோ


Kasimani Baskaran
ஏப் 27, 2024 06:20

தமிழக அரசே வருடங்களாக சாராயம் விற்கிறது ஆனால் எழுதப்படிக்க எத்தனை பேருக்குத்தெரியும் என்ற அடிப்படை தகவல் கூட இல்லை என்பது வெட்கக்கேடானது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை