உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட் கேள்வி

அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு'' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dcqqelow&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும். கல்வராயன் மலை பகுதிகளில் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் துணையோடு கள்ளச்சாராய விற்பனை என செய்தி வருகிறது. விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. இது தொடர்பாக, வரும் 26ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சியில் 161 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

M Ramachandran
ஜூன் 21, 2024 19:56

எதிர்த்து கருத்து தெரிவிக்கும் சவுக்கு சங்கரை சிறையில் தல்ல லா சட்டமிருக்கு வெள்ளியீர் பயிராய்ய்ய மேயும் போனது சட்டம் கண்னையை மூடிக்கும்


M Ramachandran
ஜூன் 21, 2024 19:42

ஒன்றிய அரசாக யிருக்குமோர் என்று நம் சட்டை பைக்குள் இருக்கும் பத்திரிக்கையகளை வைத்து திசை திருப்ப முடியுமா பார்க்கலாம். எங்கெ நம் அன்பு உடன் பிறப்புகள் திருமா வைக்கோ காமிகள் காங்கரஸ் தலைவ்வர். எல்லாம் தேர்தல் நேரத்தில் பசைய்யக்கா தான் வந்து பார்க்கிறார்கள். இது மாதிரி மனம் நொந்து இருக்கும் கஷ்டகாலத்தில் எஙகே என்று தெரியால தேடனும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 21, 2024 18:23

திமுக என்னும் கட்சியும் அதன் அதிகார தலைமையும் என்றால் கேட்கவா போறீங்க


duruvasar
ஜூன் 21, 2024 18:14

வழக்கம்போல பிராசிக்யூஷன் தரப்பில் நம்ப தகுந்த ஆதாரங்கள் இருக்காது. சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறிவிடுவார்கள். நிறைய பார்த்தாகிவிட்டது


veeramani hariharan
ஜூன் 21, 2024 16:19

Why Honourable Court directly instructed to T.N government for CBI enquiry


Ram pollachi
ஜூன் 21, 2024 15:35

கேள்வி கேட்டே பழக்கப்பட்ட நீதிமன்றங்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கத் தெரியாது.. நூறு டாக்டர்கள் சேர்ந்து குடிகாரர்களை காப்பாற்றுவதை விட, ஒரு நீதிபதி பாதிக்கப்பட்டவர்களிடம் மரண வாக்குமூலம் பெற்று பலரை தண்டிக்க முடியும் . சாவுக்கு பணம் தான் தீர்வு என்றால் அந்த பணமும் பிணமும் ஒன்றே!


Siva
ஜூன் 21, 2024 15:33

Tamil Nadu Government, Need to Dismiss whoever involved into this matter.


Palanisamy Sekar
ஜூன் 21, 2024 15:29

அய்யா நீதிபதி அவர்களே ஒவ்வோர் முறையும் நான் நடவடிக்கை எடுப்பேன், நான் செய்து காட்டுவேன், நான் யார் தெரியுமா என்று வீராதி வீர வசனம் பேசுகின்ற ஸ்டாலின் தான் முதற்காரணம். அவரை பதவிக்கு லாயக்கில்லை என்று நீதிமன்றம் அரசியல் சட்டம் அனுமதி அளிக்கும் என்றால் அவரை டிஸ்மிஸ் செய்து காட்டுங்கள் நாடும் நல்லா இருக்கும். போலீஸ் துறையை வைத்திருப்பவர் யாரோ அவரே பொறுப்பு. சட்டம் ஒழுங்கு சீரழிய அவரே காரணம். யாருன்னு கேட்காதீங்க.. அவரேதான்.சென்ற முறையும் இப்படித்தான் கள்ளச்சராய சாவுகள்.இது தொடரும் தவிர நிறுத்தமுடியாது. ஆளும் கட்சிக்கு அருகத்தையே இல்லை. மலைகளே காணாமல் போய்க்கொண்டு உள்ளது. அத்தனையும் இந்த சமயத்தில் கேளுங்க நல்லா கேளுங்க.. சூடு சொரணை இருந்தால் ஆட்சியை விட்டு விலகி ஓடிடனும். உடனே.


Krush
ஜூன் 21, 2024 15:14

பெட்டி வந்துடுச்சா கனம் அவர்களே...


anuthapi
ஜூன் 21, 2024 15:01

இதே கோர்ட் அவர்களுக்கு ஜாமின் வழங்க போகுது .


மேலும் செய்திகள்