உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை பல்கலை. வினாத்தாள் கசிய விட்டது யார்; 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடுகிறது போலீஸ்!

நெல்லை பல்கலை. வினாத்தாள் கசிய விட்டது யார்; 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடுகிறது போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பருவத்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கடந்த மே 27ம் தேதி 'இண்டஸ்ட்ரியல் லா' பாடத்தின் தேர்வு நடக்க இருந்தது.வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளில் இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டது.இந்த நிலையில், பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிவேதா
மே 31, 2025 12:46

வெளி மனிதர்களால் இது நடந்திருக்க வாய்ப்பு குறைவு. பல்கலைக்கழக தேர்வு துறை மீது துணை வேந்தரால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை. ஒரு வினாத்தாள் கசியும் போது மாற்று வினாத்தாள் கொடுத்து குறித்த நேரத்தில் தேர்வு நடத்தமுடியாதது ஏன் என பதிவாளர் சொல்லவுமில்லை


சமீபத்திய செய்தி