உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திரிஷாவின் சமூக வலைதள கணக்கு கைப்பற்றியது யார்?

திரிஷாவின் சமூக வலைதள கணக்கு கைப்பற்றியது யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகை திரிஷாவின் சமூக வலைதள கணக்கு, இணையக்குறும்பர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.நடிகை திரிஷா, தமிழ் மற்றும் தெலுங்குப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது சமூக வலைதள கணக்கில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவரது எக்ஸ் கணக்கை மட்டும் 60 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.அவற்றில் அவ்வப்போது தன் படங்களை வெளியிடுவது திரிஷாவுக்கு வழக்கம்.இன்று இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரி பதிவிட்டிருந்த திரிஷா, 'என்னுடைய எக்ஸ் சமூக வலைதள கணக்கு (டுவிட்டர்) ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது மீட்கப்படும் வரை அதில் பதிவிடப்படும் எதுவும் என் பதிவல்ல' என்று தெரிவித்திருந்தார்.இதையடுத்து ரசிகர்கள், அவசரம் அவசரமாக, அவரது எக்ஸ் பக்கத்தில் சென்று பார்த்தனர். ஆனால், அங்கு சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை. எக்ஸ் பக்கத்தை கைப்பற்றியது யார், அவர்களது நோக்கம் என்ன என்பது பற்றி தெரியாத நிலையில், களவாடப்பட்ட கணக்கை மீட்க திரிஷா முயற்சி மேற்கொண்டுள்ளார்நேற்று நடிகை கஸ்துாரியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்ட நிலையில், இன்று திரிஷாவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Velan Iyengaar
பிப் 11, 2025 22:15

எப்ப்பேற்பட்ட அதிமுக்கிய விஷயத்தை இந்த தளம் முன்னுரிமை கொடுத்து இங்கு வெளியிட்டு இருக்கு இதில் இருந்து அறிந்துகொள்ளும் அதிமுக்கிய விஷயம் என்னவென்றால் .... விஜய் ... உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா மெகா ஊழல் bjp கட்சியின் சி டீம் என்ற புரிதல் தான் .......இவனை பிராக்கெட்டுக்குள் அதவாது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்கள் ....


Karthik
பிப் 11, 2025 21:58

எலன்மஸக்–குக்கு கப்பம் கட்டாம விட்டிருப்பாரோ?


RAMAKRISHNAN NATESAN
பிப் 11, 2025 21:12

25L கூவாத்தூரில் செலவு பண்ணதை போட்டுடைத்த ஆளா இருக்குமோ ?


M Ramachandran
பிப் 11, 2025 19:44

வீடெல்லாம் பரிசாக கொடுத்த உட்பீ யாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை