உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி

தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பிரதமரும், முதல்வரும் எங்கள் நாட்டில் தொழில் துவங்க வாருங்கள் என அழைக்கும்போது, நீங்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால், யார் இங்கு முதலீடு செய்ய வருவர்' என, ஹூண்டாய் நிறுவன தொழிற்சங்கத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.

பணி நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 'ஹூண்டாய் மோட்டார்ஸ்' நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு: எங்கள் கார் தயாரிப்பு நிறுவனத்தில், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கம், நிறுவனத்துக்கு எதிராக, 2008ல் பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தியது. ஒழுங்கீனமாக நடந்த, 64 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.சட்டவிரோதமாக வேலை நிறுத்தம், போராட்டம், கூட்டம் போன்றவை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில், நிறுவனத்துக்கு உள்ளே அல்லது நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ஆனால், இந்த தடை உத்தரவை மீறி, ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து புகார் அளித்தும், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, இந்த தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எப்படி முன்னேறும்

இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கம் தரப்பில், 'எங்களது சங்கம் எந்த வேலைநிறுத்தமும் செய்யவில்லை. முறையாக சங்கத்தை நடத்தி வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''பிரதமரும், தமிழக முதல்வரும் எங்கள் நாட்டில் தொழில் துவங்க வாருங்கள் என, அழைக்கும்போது, நீங்கள் இவ்வாறு போராட்டம் நடத்தினால், யார் முதலீடு செய்ய வருவர்; நாடு எப்படி முன்னேறும்,'' என, கேள்வி எழுப்பினார்.மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ragupathi
ஜூலை 05, 2025 19:28

இதோ தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்களே அப்போது தொழிற்சாலை பாதிக்கபடுமே அதை எதிர்த்து இந்த காம்ரேட்டுகள் போராடினார்களா இல்லையே ஏன்? தூண்டிவிடுவதே அவர்கள் தானே.


Ramesh
ஜூலை 05, 2025 17:08

ஆமை புகுந்த வீடு உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. இதற்கு உதாரணம் ஸ்டாணாடர்ட் மோட்டார் தொழிற்சாலை, சிம்ஸன் தொழில்கள், பின்னி தொழிற்சங்க ஆலை மற்றும் பல நிறுவனங்கள். தமிழகம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தொழில்துறையில் பின் தள்ளப்பட்டது. கம்னாட்டி கம்யூனிஸ்ட்டுகளை ஒரு வழியாக எம்ஜிஆர் ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் தலையை தட்டி ஓரமாக ஒக்கார வைத்ததினால் தமிழகம் மீண்டும் எழுந்து வந்து இன்று தொழில்துறையில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த காலகட்டத்திலேயே அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருந்தால் பொருளாதாரத்தில் தமிழகம் மற்ற எல்லா மாநிலங்களையும் மொத்தமாக தூக்கி சாப்பிட்டிருக்கும். இவர்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விலை ஓட்டு நறுக்கி சுவடே தெரியாமல் துடைத்து எறியப்பட வேண்டும். அது தான் தமிழக முன்னேற்றத்திற்க்கு நல்லது.


Barakat Ali
ஜூலை 05, 2025 16:02

தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி .... அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை ????


Madras Madra
ஜூலை 05, 2025 15:20

நோகாம நுங்கு எடுத்து உண்ணும் பரம்பரையில் வந்த சோம்பிகள் நாங்கள் எங்கள் வேலை போராட்டம் நடத்துவது அதை விட்டால் எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது யுவர் ஹானர்


Kasimani Baskaran
ஜூலை 05, 2025 15:05

ஒழுங்காக நடக்கவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது திராவிடக்கோட்பாடு. உற்பத்தித்திறனை அடிப்படையாக வைத்துத்தான் தொழிற்சாலை லாபம் பார்க்கமுடியும் . ஐம்பது ஊழியர்கள் வேலை செய்யும் ஒரு லைனில் ஒருவன் வேலை செய்யவில்லை என்றாலும் லைன் படுத்துவிடும். 50 கார் உற்பத்தி இலக்கு என்றால் ஒருவன் சரியான நேரத்துக்கு வேலைக்கு வரவில்லை என்றால் அல்லது தப்பும் தவறுமாக வேலை செய்தால் 40 அல்லது அதைவிட குறைவான எண்ணிக்கையில் கார் உற்பத்தி ஆகும்.


Ram
ஜூலை 05, 2025 14:45

சரியான கேள்வி , தேவையில்லாமல் ஸ்டெர்லிட் ஆலையை பேச்சைக்கேட்டு மூடினார். இப்போ நாம்ப அதிக விலைகொடுத்து தாமிரத்தை வெளிநாட்டிலிருந்து வாங்கிக்கொண்டிருக்கிறோம் … இவனுக டாஸ்மாக்கை தொடர்ந்து நடத்தி குடும்பங்களை ஸ்லொவ் பாய்சனில் கொன்னுக்கிட்டுருக்காங்க


தத்வமசி
ஜூலை 05, 2025 13:21

கேட்டாலும் கேட்டார் ஒரு கேள்வி. இதற்கு உண்டி குலுக்கிகளிடம் என்ன பதில் உள்ளது ? ஆயிரம் கோடி ரூபாவை முதலீடு செய்து செய்யும் தொழிலில் நூறு ரூபாய்க்கு போஸ்டர் ஒட்டி அதை மூட வைப்பானுங்க. கம்பெனி பிடிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்து விட்டுச் செல்லவும். அல்லது வழக்கு மன்றம் சென்று கேட்கவும். கேட்பது சரியாக இருந்தால் வட்டியும் அசலுமாக வரப் போகிறது. கம்பெனி சரி இல்லையா யாரும் வேலைக்குச் செல்லாதீர்கள். அப்பன் வீட்டு சொத்து போல இது கொடு, அது கொடு என்று கத்தி போராட்டம் நடத்தி வேலை செய்பவனையும் வேலை செய்யாமல் விடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இது நாட்டுக்குச் செய்யும் துரோகம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 05, 2025 12:34

எங்களது சங்கம் எந்த வேலைநிறுத்தமும் செய்யவில்லை. முறையாக சங்கத்தை நடத்தி வருகிறோம் - முதலில் முறையாக தொழிற்சாலை நடக்க ஒத்துழைக்க வேண்டும். தொழிற்சங்கம் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்தான் என்று இந்த கம்மிநாட்டிகள் என்று உணர்வார்கள்?


Varadarajan Nagarajan
ஜூலை 05, 2025 12:23

தமிழகத்தின் பல பகுதிகளில் ஏதாவது புதிய வணிக நிறுவனமோ அல்லது மருத்துவமனையோ தொடங்கினால் அதன் வாசலில் முதலில் ஆட்டோ ஓட்டுநற்சங்க கொடி ஏற்றப்படும். அதன்பிறகு அந்த இடத்தில் ஒரு இருசக்கர வாகனத்தைக்கூட நாம் நிறுத்தமுடியாது. அதேபோலத்தான் தொழிற்சாலையில் பணியில் சேரும் தொழிலாளர்களும். முதலீடு போட்டவர்கள் தொழில் போட்டியை சமாளித்து லாபம் பார்க்கிறார்களோ இல்லையோ சங்கம் தனது வேலையே ஆரம்பித்துவிடும். இவைகளுக்கு உதவுவதெற்கென்றே சில அரசியல்கட்சிகள் உள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் சென்னை புறநகர்களில் பல தொழிற்சாலைகள் இதனால் மூடப்பட்டுள்ளன. ஸ்ட்ர்லயிட் தொழிற்சாலையை மூடும்வரை அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் அங்கேயே முகாமிட்டிருந்தார்கள். மிகவும் உணர்ச்சிவசமாக பேசும் அரசியல்வியாதியஸ்தர் ஒருவரும் அங்கேயே இருந்தார். அதற்க்கு பின்புலத்தில் வெளிநாடு சக்திகளும் இருந்தன. தற்பொழுது பல்லாயிரம்பேர் வேலையிழந்து தவிக்கின்றனர்


Minimole P C
ஜூலை 06, 2025 13:02

well said.


D Natarajan
ஜூலை 05, 2025 12:16

இது விடியல், திராவிட மாடல் . தமிழ் நாடு இந்தியாவிலேயே முன்னேறிய நாடு என்று மார் தட்டிக்கொள்ளும் விடியா அரசு.


சமீபத்திய செய்தி