மேலும் செய்திகள்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,'
06-Jul-2025
சென்னை : 'பேனா சிலை, கார் ரேஸ் என வீண் செலவு செய்ய தயாராக இருக்கும் தி.மு.க., அரசு, உழவர் நலனுக்கு மட்டும் செலவு செய்ய யோசிப்பது ஏன்?' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பிஉள்ளார்.அவரது அறிக்கை:
கரூர், திருச்சி மாவட்டங்களில், 10,000 ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமான கட்டளை வாய்க்காலின் புனரமைப்பு திட்டத்தை, நிதி பற்றாக்குறை எனக் கூறி, 2021 முதல் நிறுத்தி வைத்து, விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது, தி.மு.க., அரசு. இதனால், செடிகள் வளர்ந்து, கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வருவதில் சிரமமாகி, பயிர்கள் வாடி வதங்குகின்றன. மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை மட்டுமே விவசாயிகள் நம்பியிருக்கும் நிலையில், வாய்க்காலை புனரமைக்காமல் காலம் தாழ்த்துவது முறையா? பேனா சிலை, கார் ரேஸ் என, வீண் ஆடம்பரங்களுக்கு செலவு செய்ய தயாராக இருக்கும் தி.மு.க., அரசு, உழவர் நலனுக்காக செலவு செய்ய யோசிப்பது ஏன்? இது தான், நாடு போற்றும் நல்லாட்சியா? மேடைகளில் மட்டும், 'நானும் டெல்டாக்காரன் தான்' என்று முழங்கும் விளம்பர மாடல் ஆட்சியை, விவசாயிகள் விரட்டியடிப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
06-Jul-2025