உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்?: திமுக அடுக்கும் காரணங்கள்

அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்?: திமுக அடுக்கும் காரணங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி வைப்பதற்காகவும், டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்தாலும் அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது எனக் குற்றம்சாட்டி, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில் ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை கொண்டு வந்ததே அதிமுக தான். 1992ல் பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக ஓட்டுச்சாவடியை கைப்பற்றும் வன்முறையை அறிமுகப்படுத்தியது அதிமுக தான்.

நானும் ஒருவன்

ஆலந்தூர் நகராட்சியில் 20 பூத்களில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டுகளை அதிமுக.,வினர் போட்டனர். இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான், தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுக நடத்திய 'பூத் கேப்சரிங்' விஷயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு திமுகவை சாக்கு சொல்லக்கூடாது.

தைரியம் உள்ளதா

இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் அதிமுக பிதற்றுகிறது. இபிஎஸ், தேர்தலை புறக்கணித்துள்ளதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் ஓட்டளிக்க மாட்டார்களா? ஓட்டுப்போட வேண்டாம் என கட்சிக்காரர்களை கேட்டுக்கொள்ளும் தைரியம் இபிஎஸ்.,க்கு உள்ளதா? அதிமுக.,வில் யார் யாரெல்லாம் ஓட்டளிக்கிறார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்க உள்ளோம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தான் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். நாங்கள் வலுவாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஜூன் 18, 2024 08:53

நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தான் உங்கள் பங்காளி கட்சி தேர்தலை புறக்கணித்ததாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.... அது உண்மையா ???


sankaranarayanan
ஜூன் 17, 2024 21:38

ஆலந்தூர் மைனர் இவரு ஒரு தேர்தலிலாவது மக்கள் வாக்குகளை பெற்று வெற்றிபெற்று கட்சியை நடத்த முடியாமல் எதிர்க்கட்சிகளும் தலைவர்களையும் சகட்டுமேனிக்கு வாய் வார்த்தைகளால் திட்டுவது என்பது வழக்கமாக போயிடுச்சு நீதிமன்றங்களும் இவர்க்கு ஒரு எச்சரிக்கையாவது விடுவதும் இல்லை


GMM
ஜூன் 17, 2024 17:47

எடப்பாடி இப்போது சேர தயங்குவது ஏன்? வரும் தேர்தலுக்கு முன் அண்ணா திமுக நிலைகுலைந்து விடும். காங்கிரஸ், திமுக கூட்டணி இல்லை என்றால், டெபாசிட் கடினம். பாட்டாளி வெற்றி பிரகாசம். திமுக, இந்திய புள்ளி கூட்டணி மிக உச்சம்


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூன் 17, 2024 17:47

ஆக மொத்தம் ஊரு ரெண்டு பட்டால்.... கூத்தாடிக்கு கொண்டாட்டம்... எதிரணியினர் ஒன்று பட்டால் உங்க பருப்பு வேகாது....உங்க பதற்றம் புரியிது


Kadaparai Mani
ஜூன் 17, 2024 17:39

If AIADMK is powerless and going to loose deposit why all the media discuss about aiadmk.


Velan
ஜூன் 17, 2024 17:28

இந்தாளு ஒரு காமெடி பீஸ். அப்ப அப்ப வந்து தமாஸ் பண்ணிட்டு போவாரு


Devanand Louis
ஜூன் 17, 2024 16:45

மதுரை திருபரங்குன்றம் வட்டாச்சியர் மற்றும் தோப்பூர் வீ எ ஓ அலுவலகங்களில் பெரிய பெரிய தில்லை முள்ளின்ஸ் வேலைகள் நடைபெறுகின்றன -வீட்டுமனை பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்து பொதுமக்களிடம் பெரிய தொகையினை வாங்கும் கும்பல் இவ்விருஅலுவலகங்களில் உள்ளார்கள் .இவர்கள் இந்த திராவிட மாடல் அரசின் நற்பெயரினை கெடுத்துகொண்டுஇருக்கிறார்கள் . தகுந்த நடவடிக்கை தேவை


Bala
ஜூன் 17, 2024 16:29

நீங்க என்ன அதிமுகவில் யாரெல்லாம் ஓட்டளிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது ? ஒட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. RSB சொல்வதுபோல் யாரும் யாரையும் ஓட்டளிக்காதீர்கள் என்று சொல்வதற்கு உரிமையில்லை. ஓட்டளிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்வதும் சட்டப்படி குற்றம். ஆதிமுக தொண்டர்களே நீங்கள் உங்கள் ஓட்டுப்போடும் ஜனநாயக கடமையையும் உரிமையையும் யாருக்காகவும் விட்டுத்தராதீர்கள். எக்காரணம் கொண்டும் தீய சக்திக்கு வாக்களிக்காதீர்கள். புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களும் அம்மா அவர்களும் தீயசக்தி என்று யாரை சொன்னார்கள் என்று உங்கள் அனைவருக்குமே தெரியும் . 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் வலிமையான பாரதத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியதாக இருக்கும். தமிழகத்தில் அனைத்து மக்களுக்குமான ஒரு கூட்டாட்சி உருவாகும். இதற்கு விக்கிரவாண்டி தேர்தல் ஒரு முன் உதாரணமாக திகழும். இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள். வாழ்க தமிழகம்


பேசும் தமிழன்
ஜூன் 17, 2024 16:25

திமுகவில் யாரெல்லாம் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று முதலில் கணக்கு எடுங்கள்.... நீங்கள் சொன்ன உங்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும்... நீங்கள் தேர்தலில் வாங்கிய ஓட்டு எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.


பேசும் தமிழன்
ஜூன் 17, 2024 16:21

நீங்கள் உங்கள் கட்சியை பற்றி மட்டும் பேசினால் போதுமானது..... அடுத்த கட்சியை காலை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ