உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? நன்றி சொன்னதாக திருமா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக் 14) முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள் ஜாதி பெயர்களுடன் அடையாளப்படுத்தப் பட்டிருந்தன. ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தைப் பின்பற்றுவதால் ஜாதியை ஆதரிப்பதாகாது. ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். இன்னும் சில ஜாதிப் பெயர்களில் உள்ள ''ன்'' விகுதியை மாற்றி ''ர்'' விகுதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள பாலத்தை ஜிடி என்று மட்டுமே பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் அது மகிழ்ச்சி. ஜிடி நாயுடு என்ற பெயரில் தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று ஒரு முடிவை அரசு எடுத்திருப்பதால், அது ஜாதியை வளர்ப்பதற்காக இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V K
அக் 14, 2025 13:05

தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் வாங்க போனேன் கரெக்டா சொல்லுங்க யா


Sun
அக் 14, 2025 13:05

புளுகலாம்! அதுக்காக ஏக்கர் கணக்குல லெல்லாம் புளுகக் கூடாது.


P.M.E.Raj
அக் 14, 2025 13:03

அப்படியே ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டையும் அகற்ற ஸ்டாலினிடம் சொல்ல வேண்டியதுதானே. ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு மட்டும் வேண்டும் ஆனால் ஜாதிப்பெயர் வைக்கக்கூடாது? ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை அகற்றும் நாள்தான் உண்மையான சமூகநீதிநாள்.


Suresh Velan
அக் 14, 2025 12:58

ரவுடி திருமாவளவன் சொல்றதை பாருங்க, இந்த ஆளு கூட்டத்தில் வாயை திறந்த 10 பிணங்கள் விழும், அப்படிப்பட்ட லட்சணத்தில் இந்த ஆளு நடவடிக்கை தற்போது உள்ளது, இப்போது தேனும் பாலும் ஊறுகிற மாதிரி பேசுகிறான், இவரை எதை கொண்டு .......


முக்கிய வீடியோ