உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தினாலும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?

வெறி நாய்க்கடி தடுப்பூசி செலுத்தினாலும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், உயிரிழந்ததற்கான காரணம் குறித்து, பொது சுகாதாரத் துறை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. தமிழகத்தில், 20 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. ஆண்டுதோறும் நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், நாய்க்கடியால் ஆண்டுக்கு சராசரியாக, 4.80 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில், 40 பேர் வரை, 'ரேபிஸ்' தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். உத்தரவு இந்தாண்டில் இதுவரை, 3.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 22 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த 22 பேரும், வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசியை முறையாக செலுத்திக் கொண்டவர்கள்; அப்படி இருந்தாலும், அவர்கள் உயிரிழந்து இருப்பதாக அக்குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனரா; நாய்கள் கடித்து எத்தனை மணி நேரத்தில் தடுப்பூசி செலுத்தினர்; அதற்கு முன் தடுப்பு சிகிச்சை எடுத்தனரா போன்றவற்றை ஆய்வு செய்ய, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுஉள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:

தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் ரேபிஸ் நோய் வந்ததற்கு, தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று கூற முடியாது. தமிழகத்தில், 3.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை.

கடினம்

தற்போது வரை, 22 பேர் தான் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாய் கடித்தால் உடனடியாக தாமதமின்றி சிகிச்சை பெற வேண்டும். முறையாக தடுப்பூசி செலுத்தாமல் விட்டால், ரேபிஸ் வந்தால் காப்பாற்றுவது கடினம். இந்தாண்டு உயிரிழந்துள்ள, 22 பேரும் முறையாக தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறையை பின்பற்றி உள்ளனரா என ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். நாய் கடித்தால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? நாய், பூனை போன்ற எந்த பிராணி கடித்திருந்தாலும், உடனடியாக சோப்பு, கிருமி நாசினி கொண்டு குறைந்தது, 10 முறையாவது, அந்த இடத்தை கழுவ வேண்டும். பின், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். குறிப்பாக, நாய் கடித்த இடம் மிக ஆழமாக இருந்தால், ரேபிஸ் தடுப்பூசி யுடன், 'இம்யூனோகுளோபளின்' மருந்தையும் சேர்த்து செலுத்த வேண்டும். ஏனென்றால், தடுப்பூசி செலுத்தினால், ஏழு நாட்களுக்கு பின், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல், நாய் கடித்தால், 10 நாட்களுக்கு பின் தான் ரேபிஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இடையில் இருக்கும் மூன்று நாட்கள் தான் முக்கியமானது. நாய் கடித்தவுடன் தடுப்பூசி செலுத்தியிருந்தால், ரேபிஸ் தாக்குவதற்கு முன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அப்பாதிப்பை கட்டுப்படுத்தும். அந்நோய் வந்து விட்டால், கட்டுப்படுத்த எந்த மருந்தும் இல்லை; உயிரிழப்பையும் தடுக்க முடியாது. நாய் கடித்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவதுடன், நான்கு தவணை தடுப்பூசியையும் முறையாக செலுத்த வேண்டும். - டாக்டர் குழந்தைசாமி பொது சுகாதாரத்துறை நிபுணர் - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
செப் 20, 2025 19:09

இதேபோல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் கூட ஆராய்ச்சி முக்கியம் சாமி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 20, 2025 07:56

நாய்களுக்கு சமைத்த உணவு சமைத்து மாமிசம் மற்றும் கெட்டு போன ஊசிப்போன உணவு பொருட்கள் சாப்பிட கொடுக்க கூடாது. அரிசி சாப்பாட்டில் பால் அல்லது தயிர் சேர்த்து உப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும். உப்பு சேர்த்து எந்த உணவு பண்டங்களும் மிருகங்களுக்கு கொடுக்க கூடாது. காட்டில் வாழும் எந்த மிருகமும் உப்பு சேர்த்தோ சமைத்த உணவையோ இறை தேடி சாப்பிடுவதில்லை. உப்பு மனிதர்களுக்கு மட்டுமே. விலங்குகளுக்கு தேவையில்லை. தூங்கும் நாய்களை தொந்தரவு செய்து எழுப்பி துரத்தக்கூடாது. சாலை யோரம் மரங்களை வைத்து வளர்க்கவும். மர நிழலில் நாய்கள் நன்கு உறங்கினாலே நாய்களால் தொந்தரவு இருக்காது. உலக வெப்பமயமாதல் காரணமாக கூட தெரு நாய்கள் கூட்டம் அதிகமாகி இருக்கலாம். ஆகவே மரம் நடுவோம் மழை பெறுவோம். வெப்பத்தை குறைப்போம். விலங்கினங்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ளவோம்


Vasudevamurthy
செப் 20, 2025 07:44

Best solution is to make sure that no dogs are roaming around in the streets.


Svs Yaadum oore
செப் 20, 2025 07:43

நாய் பிடிப்பதை தெருநாய் ஆர்வலர், எவராவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவர் தடுத்தார்?? ... நாய்க்கடி வாஸின்மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் ....நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் என்று அதிலும் விடியல் கொள்ளை... நாய்கள் பெருக கமிஷன்தான் காரணம் ...


Svs Yaadum oore
செப் 20, 2025 07:42

இந்த நாய்க்கடி வாஸின் விற்பனை மட்டும் வருஷம் 3000 கோடிகள் ....அதில் மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் .....அதற்கும் மேல் நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் அதில் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் லஞ்ச ஊழல் என்று பல நூறு கோடிகள் பணம் கொள்ளை .. ..இந்த லஞ்ச ஊழல் கொள்ளை உள்ளவரை இந்த நாய்க்கடி இறப்பு இங்கு தீர வழி இல்லை .....நீயா நானா என்று செட் அப் நாடகம் நடத்தி தெரு நாய்களுக்கு நாய் வளர்ப்போர் காரணம் என்று மடை மாற்றி விடியல் கொள்ளை .. ..நாய் பிடிப்பதை எவனாவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவர் தடுத்தார்?? ...


MUTHU
செப் 20, 2025 09:41

நாய்க்கடி மருந்துன்னு வெறும் தண்ணிய அடைச்சு வாங்கினாலும் வாங்கலாம்.


Senthoora
செப் 20, 2025 07:16

வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி போட்டவர்கள் சில வாரங்களுக்கு , வெளிநாடுகளில் வலிநிவாரண மாதிரியான Newrofen போன்ற மாத்திரைகளில் அதிக அளவு Ibuprofen இருப்பதால் அதை எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. கொரோன தடுப்பு ஊசிபோட்டவர்கள், 3 வாரத்துக்குள் இந்த வகை மருந்தை எடுத்தவர்கள் மரணத்தையும், மார்பு வலியும் சந்தித்து இருக்கிறார்கள். வெறிநாய் ஊசி போட்டால் சில வாரங்களுக்கு முக்கியமா பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை