உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராயத்தை பாதுகாக்கும் அரசு நெல்லை பாதுகாக்காதது ஏன்? சீமான் கேள்வி

சாராயத்தை பாதுகாக்கும் அரசு நெல்லை பாதுகாக்காதது ஏன்? சீமான் கேள்வி

கோவை : 'உயிரை பறிக்கும் சாராயத்தை பாதுகாக்கும் தி.மு.க., அரசு, உயிரைக் காக்கும் நெல்லை பாதுகாக்க தவறி விட்டது,' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தினார்.கோவையில் அவர் அளித்த பேட்டி:ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரில், நெல் சேகரித்து, அதை பாதுகாக்க கிடங்கு இல்லாதது வருத்தத்திற்கு உரியது. டாஸ்மாக் மது பானங்களை பத்திரமாக பாதுகாக்க, பெரிய பெரிய கட்டடம் கட்டி, அதில் குளிரூட்டி, கண்காணிப்பு கருவி நிறுவி, காவலர்களை போட்டு, தி.மு.க., அரசு பாதுகாக்கிறது. ஆனால், உழைக்கும் விவசாயிகள், உயிரைக் கொடுத்து விளைவிக்கும் உணவுப் பொருளை, தெருவில் கொட்டி மழையில் நனையவிடும் அவலம் உள்ளது. மக்களுக்கு சேவை செய்யாதவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், மக்கள் நலன் என்பது கனவாகத்தான் இருக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ckdu2pus&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மனசாட்சி இருந்தால் நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவார்களா? இதுதான் சாதனையா? ஒரு நாள் பட்டினி கிடந்து சாகும்போது, அதன் அருமை தெரியும். தமிழகத்தில், நெல், கரும்பு இருக்கும்போது, அரிசியையும், வெல்லத்தையும் வெளி மாநிலங்களில் இருந்து ஏன் வாங்க வேண்டும். கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்தே எந்த அரசும், விவசாயிகளை மதிப்பதில்லை. நெல் சேமிப்பு கிடங்குகளையும் கட்டவில்லை. மக்களின் உயிரை பறிக்கும் சாராயத்தை பாதுகாக்கும் அரசு, உயிரை பாதுகாக்கும் உணவான நெல்லை பாதுகாக்கவில்லை. தமிழகத்தை, தி.மு.க.விடம் இருந்து காப்பாற்றினாலே போதும். இவ்வாறு, சீமான் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venkatesan Srinivasan
அக் 27, 2025 00:53

சாராயம் தனியார் உற்பத்தி. அரசு விலை கொடுத்து வாங்கி விட்டால். அது அரசாங்க சொத்து. அரசு கிடங்கு கட்டி பாதுகாப்பு செய்யும். விளைவிக்கும் விவசாயி, அதை விற்பனை செய்யும் வரை அவர் பொறுப்பில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். ஏன் அவர்கள் தங்கள் விளைபொருட்கள் சேமிக்க கிடங்குகள் வைத்துக் கொள்ளவில்லை. விவசாயத்திற்கு குறைந்த வட்டியில் கடன், சிலசமயம் கடன் தள்ளுபடி, விவசாய இடுபொருட்களுக்கு இயந்திரங்களுக்கு விலை மானியம், இலவச மின்சாரம், இலவச தண்ணீர் பாசனம், குறைந்த பட்ச விலை ஆதார் உறுதி மற்றும் விவசாய வருமானம் லாபம் முழு வருமான வரி தள்ளுபடி. இவை அனைத்தும் பொதுவுடைமை மக்கள் வரிப்பணம். இவ்வளவு இருந்தும் விவசாயிகளுக்கு எதனால் நஷ்டம் வறுமை? எங்கோ தவறு நடைபெறுகிறது. மக்கள் தீர்க்கமாக ஆராய வேண்டும்.


ஜான் குணசேகரன்
அக் 27, 2025 00:02

விவசாயிகள் சங்கங்களை ஏற்படுத்தி பிளவுகளை உருவாக்கி தனது பச்சை துண்டு ஏஜன்டுகளை புகுத்தி விவசாயிகளின் குரல் எடுபடாமல் திராவிட மாடல் ஆட்சி நன்கு செயல்படுகிறது. டில்லியில் நிர்வாண போராட்டம் நடத்திய குரூப் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சரக்கு அடிக்க சென்று விட்டார்களா


kjpkh
அக் 26, 2025 23:18

ஒரு அமைச்சர் சொல்லுகிறார் அதிமுக ஆட்சி காலத்தில் நெல்மணி நாற்றுகளாகவே ஆகிவிட்டன. எங்கள் ஆட்சியில் ஒரு இன்ச் தான் வளர்ந்து இருக்கிறது என்று சொல்கிறார். இதை எங்கே போய் சொல்வது.


Ganesh
அக் 26, 2025 23:11

தேர்தலுக்கு சாராய வியாபாரிகள் காசு குடுப்பாங்க... விவசாயிகள் குடுப்பாங்களா?... மாசம் மாசம் பெட்டி யார் தர்ராங்களோ அவுங்க பொருள தான் பாத்துக்காப்பா வச்சிக்க முடியும்...


Sun
அக் 26, 2025 22:48

சரியாகத்தான் கேட்டுருக்கீங்க? அரசிடம் இருந்து பதில் தேவை. பதில் வருவதற்குள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஸ்டாலினை பார்க்கப் போயிராதீங்க!


RAMESH KUMAR R V
அக் 26, 2025 21:24

அன்னம் பாதுகாக்கவிட்டால் அதன் விளைவு பயங்கரமானதாக இருக்கும். கடவுளும் மன்னிக்க மாட்டார்.


நிக்கோல்தாம்சன்
அக் 26, 2025 21:24

உழைப்பின் அருமை தெரியுமா ?


MARUTHU PANDIAR
அக் 26, 2025 21:23

நாங்க எல்லாத்தையும் தொடச்சுப் போட்டுட்டு மறுபடியும் மறுபடியும் புளுகித் தள்ளுவோமே என்ன செய்வீங்க? எங்க கையில தான் தேர்தலுக்காக திருமங்கலம் பார்முலா இருக்கே, யாரால என்ன செய்ய முடியும்?


RAMESH KUMAR R V
அக் 26, 2025 21:22

மிகவும் சரியான கேள்வி. அரசு தரப்பில் விளக்கம் கூறவும்


முக்கிய வீடியோ