உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதற்கு தேர்தல் வியூக நிபுணர்கள்: கேட்கிறார் சீமான்

எதற்கு தேர்தல் வியூக நிபுணர்கள்: கேட்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்,'' என த.வெ.க., தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஈரோடு கிழக்கில் எங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் ஓட்டுக்கள் வந்திருக்க வேண்டும் . முடிவு செய்து 25 ஆயிரத்தோடு நிறுத்தி வைத்துவிட்டார்கள். ஓட்டுக்கு காசு கொடுப்பது குற்றம்தானே. அதனையும், கள்ள ஓட்டுப் போடுவதையும் அனுமதிக்கும் தேர்தல் கமிஷன் , ஓட்டுகளை மட்டும் நேர்மையாக எண்ணுவார்களா? ஈரோடு இடைத்தேர்தலில் நான் வைப்புத்தொகை வாங்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டனர். ஓட்டு எண்ணிக்கையின் போது இதோடு போதும் என்று நிறுத்தி விட்டார்கள். பிரச்னையோடும், கண்ணீரோடும், மனுக்களோடும் வீதியில் நின்று போராடும் மக்களோடு நான் கூட்டணியில் இருக்கிறேன். இங்கு எல்லாத் தலைவர்களையும் ஒரு சாதிக் குறியீடாக நிறுத்தி விட்டார்கள் . நான் தமிழ்த் தாயின் பிள்ளையாகவே இருக்கிறேன். என்னையாவது விட்டு விடுங்கள். நாட்டை சிறப்பாக ஆட்சி செய்த என் முன்னோர் எல்லோரும் தேர்தல் வியூக நிபுணர்களை வைத்துக் கொள்ளவில்லை; பிரசாந்த் கிஷோருக்கு தமிழகம் பற்றி என்ன தெரியும்? தனது நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல், ஏன் இந்த வேலைக்கு வேண்டும்? மேஜையில் உட்கார்ந்து கொண்டு கத்திரிக்காய்... சுரைக்காய்... என்று எழுதி என்ன பயன்?பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Dhanraj V.
பிப் 14, 2025 16:56

ஐயா.... எதிர்க்கப்பட வேண்டியது ஊழலும், மதவாதமும்தான்.... இதனை அழிக்க விஜய் அமைக்கும் யூகமல்ல....


Venugopal
பிப் 13, 2025 07:54

அப்போ விஜய் மாடலின் பீ டீம்


Karthik
பிப் 12, 2025 21:26

தம்பி தம்பி என்றழைத்த வாய் இன்று கொழுப்பெடுத்தவன் என்கிறதே..?


Dhanraj V.
பிப் 12, 2025 18:08

மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் கட்சிகளை சீமான் தன் வாயால் எதிர்க்கட்டும். புயலாக வலுப்பெற்று வரும் விஜையை எதிர்ப்பது அவருக்கு நல்லதல்ல....


Velan iyengaar,Sydney
பிப் 13, 2025 07:53

தன்ராஜ்...கமல்ஹாசன் நிலை என்ன ஆயிற்று? கொஞ்சம் பொறுமை யாக இரும். ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்கள் போடாதே.


Varuvel Devadas
பிப் 12, 2025 15:48

It seems Vijay has no brain to develop election strategies independently or with his team. He hires a person, who does not use any advanced technique to develop election strategies and to fore the election results. If he is good enough to fore the election results with his strategies with at least 90 percent accuracy, why did his prediction fail in a few States? His strategies were successful in a few places or a few states. If he is good enough, why did he lose the election in his state, Bihar? In my view, Prasanth Kisore is not a political scientist for developing optimal strategies for winning the election, but an intelligent man to make money like Mr. Seeman, the NTK leader in Tamil Nadu.


Madras Madra
பிப் 12, 2025 15:26

நோகாம நுங்கு திங்கறது எப்படின்னு சொல்லி குடுப்பானுங்கோ நிபுணனுங்க எங்களால அதான் முடியும் காசு எவந்தோ மூளை எவந்தோ அதிகாரம் எவந்தோ நான் ஒரு புகழ் அடிமை எனக்கு ரசிகனுங்க இருக்கானுங்கோ அவனுங்கள வாக்காளனா மாத்தி அவிங்க வாழ்க்கைல விளக்கு அடிப்பான் இந்த தளபதி


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 12, 2025 15:02

கணக்கு பாடம் சரியாக தெரியவில்லை புரியவில்லை. தான் ஒரு மக்கு மட சாம்பிராணி தனக்கு கணக்கு தெரியவில்லை என்றால் ஒரு கணக்கு வாத்தியாரிடம் டியூஷன் படிக்கிறோம் அல்லவா. அது போலத் தான் இதுவும். இந்தி தெரியாது போடா என்றவன் இந்திகாரனுக்கு காசு கொடுத்து பாடம் படித்து மக்களை மாக்கள் ஆக்கி ஆட்சி பிடித்து சனாதனம் ஒழிப்பேன் என்றார்கள். பீகார் மாநிலத்தித்தவரை படிப்பறிவு இல்லாதவன் தமிழகத்தை விட தரத்தில் குறைந்த மாநிலம் என்றார்கள். பின்னர் ஒரு பீகார் காரனிடம் டியூஷன் கற்ற 350 கோடி பீஸ் கட்டினார்கள். 5300 வருடங்கள் முன்பு இரும்பு உருக்க தெரிந்தவருக்கு மக்களை தேர்தல் களத்தில் எப்படி சந்திப்பது என்று தெரியவில்லை.


Raj Kumar
பிப் 12, 2025 14:24

தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் அரசியல் எப்போதும் கேலி கூத்தாகவே இருக்கும். அனைவர்க்கும் வாக்கு உரிமை என்பது மாற்றம் செய்யப்பட வேண்டும்


நாஞ்சில் நாடோடி
பிப் 12, 2025 13:54

சினிமாவில் இந்தியை எதிர்ப்பார்கள். நிஜத்தில் இந்திக்காரனை முதல்மரியாதை கொடுத்து வரவழைத்து அவனிடம் ஆலோசனை கேட்டு அரசியல் தொழில் செய்கிறார்கள். மக்களை சந்திக்காமல் ஆலோசகரிடம் மட்டும் கேட்டு எப்படி மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியும்...


Balasubramanian
பிப் 12, 2025 13:39

7 கோடி வாக்காளர்கள் ஆளுக்கு ரூ 30 மொத்தம் ரூ 210 கோடி நிபுணர் சம்பளம் ! ஜூஜூபி! இதைத் தவிர மண்டபம் எடுத்து மாசம் ஒருநாள் கறி விருந்து குவாட்டர்! வட்ட செயலாளருக்கு மாதம் ரூ 15 ஆயிரம் சம்பளம்! மாவட்டத்திற்கு ஒரு கூட்டம்! ஆளுக்கு ரூ 500 தண்ணீ பிரியாணி மற்றும் விழாச் செலவுகள்! தொகுதிக்கு கொடி கட்டிய காரில் சார் பறந்து பறந்து பிரசாரம் செய்ய ஒரு ஐம்பது இன்னோவா! தேர்தல் நேரத்தில் வாக்காளர் ஒருவருக்கு ரூ 3000. எலீகஷன் என்றால் பினன என்ன சும்மாவா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை