உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும் மரத்தடியில் வகுப்பறை நடப்பது ஏன்?

கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும் மரத்தடியில் வகுப்பறை நடப்பது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மண மேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வந்தனர்.பொன்னகரம் மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தொடக்கப்பள்ளியை 2017ல் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது. இதுவரை தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படவில்லை.பொன்னகரம் மீனவ கிராம மக்கள் ஒன்று கூடி, 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் உள்ள கட்டடத்தை சில ஆண்டுகளுக்கு முன் கட்டினர். மேலும் கட்டடம் கட்ட நிதி பற்றாக்குறையால், மாணவர்களின் நலன் கருதி கட்டடத்திற்கு முன் தகர சீட்டுகள் கொண்ட ஒரு ஷெட் அமைத்து தந்தனர்.தொடர்ந்து, வகுப்பறை இல்லாததால், மாணவர்கள் அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். இது தொடர்பாக, அறந்தாங்கி காங்., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது வரை எந்தவொரு புதிய கட்டடமும் கட்டப்படவில்லை.தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், பல இடங்களில் மரத்தடி வகுப்பறைகள் செயல்படுவது பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajarajan
மார் 30, 2025 12:48

அரசின் வருமானம் முழுவதும், அரசு ஊழியருக்கு சம்பளம் / சலுகை / ஓய்வூதியம் மற்றும் இலவசமாக போனால், இதான் நிலைமை.


Amar Akbar Antony
மார் 30, 2025 08:14

இதுவே ஒரு டாஸ்மாக் ஆக இருந்தால் கிளப் ஒன்று ஆரம்பித்து ஏ சி அமைத்து கொடுத்திருப்பார்.


Varadarajan Nagarajan
மார் 30, 2025 07:20

மத்திய அரசு நிதி தரவில்லை என மடைமாற்றுவார்கள். ஆனால் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதி என்ன ஆகின்றது என்றுமட்டும் தெரியாது. இதுவும் மாடல் அரசின் சாதனை


தியாகு
மார் 30, 2025 06:07

இயற்கை சூழலில் கல்வி என புதிய திட்டமாக இருக்கலாம்


Bhakt
மார் 30, 2025 02:56

எங்க நைனாவுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல டைம் வேணும்...அடுத்து எபிசோடில் பதில் சொல்லுவார். விடியல் சீரியல் டைரக்டர் அடுத்த எபிசோடுக்கு இதை கொண்டு திரைக்கதை எழுதுவார்.


Satheshkumar
மார் 30, 2025 02:10

ஏனென்றால் ஒதுக்கப்படும் நிதி சம்மந்தப்பட்டவர்களின் வாயிக்குள் செல்கிறது. கல்வி மந்திரி என்ன செய்கிறார்


Venkatesan Srinivasan
மார் 30, 2025 01:38

அந்த காலத்தில் திண்ணை பள்ளி கூடங்கள் இருந்தன. தனியாக பள்ளி கூடங்கள் என்று இல்லாவிட்டாலும் பிள்ளைகள் நல்ல கல்வி அந்த திண்ணை பள்ளி கூடங்களில் பெற்றனர். ஆசிரியர்கள் மிகவும் நல்ல தொண்டு மனப்பான்மையுடன் கல்வி போதித்தனர். அந்த திண்ணை பள்ளிகளில் படித்த பிள்ளைகளே பிற்காலத்தில் சமூகத்தில் போற்றுதலுக்குரிய நல்ல இடம் பிடித்தனர். ஆனால் இன்று அத்தகைய ஆசிரியர்களும் அரிது. இதில் பள்ளி கட்டிடம் இல்லாதது என்ன? நிதி ஒதுக்கீடுகள் ஆசிரியர்கள் அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் இவற்றுக்கே செலவு ஆகின்றன. மேலும் ஆசிரியர்களும் அடிக்கடி போராட்டங்கள் நடத்தி தாங்களும் சராசரி வேலையாட்கள் போல நடந்து கொள்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை