உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல்வாதிகள் மீதான வழக்கில் மட்டும் ஏன் தாமதம்: ஐகோர்ட்

அரசியல்வாதிகள் மீதான வழக்கில் மட்டும் ஏன் தாமதம்: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காவல் துறைக்கு, உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், 'அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் மட்டும் விசாரணை ஏன் தாமதமாகிறது' என, கேள்வி எழுப்பியது.அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ள, உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, 'டெண்டர்' வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.அதைத்தொடர்ந்து, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வேலுமணி மனு தாக்கல் செய்தார்.வேலுமணிக்கு எதிரான வழக்கை மட்டும், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின் ஆட்சி மாறியது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் உள்நோக்குடன் புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய கோரி, இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. அதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 'ஆறு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.இந்த உத்தரவின்படி, நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, 'அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும், ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில், காவல் துறை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்து விசாரணையை, வரும் 19க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V Venkatachalam
செப் 02, 2025 10:47

ஐயா ஜட்ஜுங்களே உங்க மனசாட்சிக்கு தெரியும். தாமதத்திற்கு ஜட்ஜுங்களுமே காரணம். ஒரே ஓரு வழக்கில் ஓரே ஒரு அரசியல் வியாதியை தாமதிக்காமல் தூக்கில் போடுங்கள். அல்லது பப்ளிக் ல் சுட்டுத்தள்ள உத்தரவிடுங்கள். அரசியல் வியாதி வழக்குகள் ஜெட் ஸ்பீடில் பைசலாகிவிடும். 2000 சாட்சி 3000 சாட்சி உள்ள வழக்கே கோர்ட்டுக்கு வராது.உஙகள் கையில் தான் நீதி பரிபாலனமே இருக்கிறது. கொஞ்சம் யோசியுங்கள்.


c.mohanraj raj
செப் 02, 2025 10:02

உச்சநீதிமன்றம் 100 கோடி வாங்குவதாக சகாக்களே சொல்கிறார்கள் அவர்களிடம் லட்சம் கோடி உள்ளது. பிறகு எப்படி தீர்ப்பு வரும்


raja
செப் 02, 2025 06:06

தங்கமயிறான் அணில் பாலாஜி போன்ற வழக்கையும் விரைவா விசாரிச்சு தீர்ப்பு சொல்லுங்க


Kasimani Baskaran
செப் 02, 2025 04:08

அரசியல்வாதிகளால் மிக எளிதாக நீதிமன்றத்தில் புகுந்து அணைத்து வித தில்லாலங்கடி வேலைகளையும் செய்ய முடியும். உதாரணத்துக்கு ஒரு வழக்கை பட்டியலிடாமல் கூட இழுத்தடிக்க முடியும்..


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 00:48

இந்த வழக்கை சு மோட்டோவாக எடுத்து, நீதிமன்ற மேற்பார்வையில் ஆறு மாசத்திலே முடிங்கோ பார்க்கலாம், உங்க நீதிபரிபாலன அழகை


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 00:33

ஜட்ஜ்வாள், ஒங்களுக்கு தெரியாதா என்ன? நல்ல காமெடி பண்றேள் போங்கோ, ஹி, ஹி.


Ramesh Sargam
செப் 02, 2025 00:19

அரசியல்வாதிகள் மீதான வழக்கில் காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் தாமதம் எதுவும் செய்யாமல் வழக்கை முடித்து, உடனுக்குடன் தண்டனை கொடுக்கவேண்டும். அப்படி தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பின் வரும் நாட்களில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும்.


ManiMurugan Murugan
செப் 01, 2025 23:27

ManiMurugan Murugan அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு களுக்கு உச்ச நீதிமன்றமே தடை உத்தரவு போடுகிறது பிறகு மற்றவர்கள் அதுவும் வழக்கு போடப்பட்ட அமைச்சர் களுக்கு பொன்னாடை போட்டு பதவிக் கொடுத்து ஊழலை வளர்க்கும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி போன்ற க் கூட்டம் அவர்களை வைத்து காசு சம்பா தி ப் பதில் தான் குறியாக உள்ளது ஒரு அரசுதுறை மீது வழக்கு என்றால் அதனை விசாரிக்காது மறைக்க மக்கள் வரிப்பணத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு எங்கே 300 கோடி ரூபாய் உல்லாச வீடு பயிர் போய்விடுமோ என்று இது தெரிந்து நீதிமன்றமும் தடை ப் போடுகிறது இப்படி நீதி துறை காவல்துறை காசுக்கு ஒப்பாரி வைப்பது சட்டம் இருட்டறை தான் என்று உறுதி செய்கிறது


Shankar
செப் 01, 2025 22:36

இப்படியே இன்னும் கொஞ்ச நாளைக்கு வழக்கை தள்ளி போடுங்க சார். அப்புறம் தேர்தல் வந்துடும். ஆட்சியும் மாறிடும். அதுக்கு அப்புறம் இந்த வழக்கு ஏசி போட்ட பெட்ரூம்ல போய் நிரந்தரமா படுத்து தூங்கும்.


Nagarajan D
செப் 01, 2025 22:30

வாங்கும் பெட்டிகளுக்கு ஏற்ப தாமதம் இது புரியவே நீதியற்ற ஜாமீன் வாய்தா மன்றங்களுக்கு 80 ஆண்டுகள் ஆகியுள்ளது.. இதை சரி செய்ய 100 வருடம் போதுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை