வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எதுக்கு? அவரும் போய் சேருவதற்கா? கேட்டில் ரயிலை நின்னு.போகச் சொல்லுங்க.
இதில் அந்த கேட் கீப்பர் தவறு மிக முக்கியமானது ..அதற்க்கு அடுத்த தவறு இன்டெர்லோக்கிங் சிக்னல் முறை இல்லாமல் போனது . ரயில்வே துறை பல ஆயிரம் சம்பாதித்து செலவழிக்கிறோம் என்று அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது வெட்கக்கேடு .. கடைசியாக மாநில அரசு இந்த இடத்தில சுரங்கப்பாதை அமைக்க தனது கடமையை இன்று வரை செய்யாமல் விட்டது .. பள்ளி வாகனத்தில் உதவியாளர் இல்லை என்பது விபத்தை தவிர்த்திருக்குமா என்றால் சாத்தியக்கூறுகள் குறைவே . வாகன ஓட்டுனருக்கு நன்றாக தெரிந்திருக்கும் அது ரயில் வரும் என்று தெரிந்தும் வாகனத்தை இயக்கியது மிக பெரிய தவறு .. தமிழகத்தில் பல முன்னாள் ராணுவ வீரர்கள் சிப்பாய் அளவில் ஓய்வு பெற்று வேலையில்லாமல் இருக்கிறார்கள் .. ஒருவேளை இந்த வேலைகளுக்கு படித்தவர்கள் வரவில்லை என்றால் அவர்களை நியமிக்கலாம் ..
Gate Lock ஆகி இருந்தால் தான் சிக்னல் கிடைக்கும் . அப்படியானால் சிக்னல் இல்லாமலேயே ரயில் ஓட்டுனர் கவனக்குறைவால் ரயிலை இயக்கினாரா.
பள்ளி வாகனங்களை ஓட்டும் பெரும்பாலான ஓட்டுனர்கள் யாரும் சாலை விதிகளை மதிப்பதே இல்லை.ஒன்வேயில் செல்வது ராங் சைடில் செல்வது சிக்னலை மதிக்காமல் செல்வது சாலையை கடக்கும் போது இருபுறமும் கவனிக்காமல் செல்வது இதுதான் இவர்களின் லட்சனம்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உள்ளே குழந்தைகள் உள்ள நிலையில் பொது மக்களின் ஆதரவோடு தப்பி விடுகிறார்கள்.பள்ளி நிர்வாகமும் நல்ல சம்பளம் கொடுத்து அனுபவம் உள்ள ஓட்டுனர்களை வேலைக்கு அமர்த்துவது இல்லை.
முழுக்க முழுக்க பள்ளி வாகன ட்ரைவர் தான் பொறுப்பு. நேரில்கண்ட பெண்ண மணி கூறியுள்ளார். கேட்டை மூட விடாமல் உள்ளேபுகுந்துள்ளான். ரைல் எஞ்சின் ட்ரைவர் சப்தம் கொடுத்து கொண்டு தான் வந்திருக்கிறார்.
எல்லா ரயில்வே கேட்டையும் கடக்க முயலுபவர்களுக்கு பாதுகாப்பாக இந்திய ரயில்வே ஓர் ஏற்பாட்டை செயதால் நல்லது. எல்லா ரயில்வே கேட்டிலிருந்து ஐனூறு அடிக்கு தள்ளி இருபுறமும் ரயில் எஞ்சின் வரும்போதே அந்தந்த ரயில்வே கேட்டில் அலாரம், சிக்னலும் - ஓர் எச்சரிக்கையாக ஒரு சிகப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்து கொண்டே இருந்தால் அந்த கேட்டை கடப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விட்டுக்கொண்டு இருருந்தால், ரயில் வரும் அந்த சமயத்தில் யாரும் கேட்டை கடக்கவே மாட்டார்கள். வெளி நாடுகளில் ஆளில்லாத கேட்டுகளில் இப்படித்தான் செய்கிறார்கள் இங்கே கேட்மேன் இருந்தாலும் இருந்து தூங்கினாலும் சரி அந்த கேட்டை கடப்பவர்களுக்கு அந்த எச்சரிக்கை எரிந்து அணைந்து கொண்டிருக்கும் விளக்கும், அலாரம் ஒலியும் சிகப்பு விளக்கு ஒளியும் உஷார் படுத்தும் இது போன்றவைகளை உடனே நமது ரயில்வே இலாக்கா அமல்படுத்தினால் இது போன்ற சாவுகள் நிகழ்வுகள் நடைபெறாது அல்லது வெகுவாக குறைக்கலாம் செய்வார்களா ரயில் துறை உடனே ?
அநேகமாக எல்லா வேனிலும் உதவியாளர். ஒரு கிழவனோ,கிழவியோ. இருப்பர். ஓட்டுநரும் . அப்படி தான் ரிட்டையர்டு கேஸ்கள்
வாஸ்தவம் தான். ரிடயர்டு கேஸ்கள் மெதுவாக மோதுவார்கள். ரிடையர்டு கேஸா இல்லாதவர்கள் வேகமாக மோதுவார்கள்.இவனா இருந்தாலும் அல்லது அவனா இருந்தாலும் தன் உயிர் மேல் அக்கறை உள்ளவனா இருக்கணும். வேனுக்குள் இருக்குற வர்கள் காப்பாற்ற படுவார்கள். இது அடிப்படை உண்மை.
"கவச்" இல்லயா?
Railway gate keeper இந்தி தெரிந்த வட இந்தியராம் . மூத்த தமிழ் பத்திரிக்கை தகவல். திறந்து, மூடி விடு டீசே என்றால் சினிமாவில் திறக்கும். ரயில்வேயில் திறக்காது. கேட் திறந்து இருந்தால் ரெட் சிக்னல் விழும். கிரீன் சிக்கல் இல்லை என்றால், ரயில் டிரைவர் வண்டியை நிறுத்தி விடுவார். பள்ளி டிரைவர் தனது செல்வாக்கு கொண்டு தாமதம் தவிர்க்க திறக்க சொல்லி இருக்கலாம். அல்லது திராவிடம்..... அபாய சிக்னல் விழுந்தாலும் ரயில் டிரைவர் ஸ்கூட்டர் போல் பிரேக் போட முடியாது. விபத்து நேர்ந்து இருக்கும்.