உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் மீது ஏதாவது ஒன்றை ஏன் திணிக்க வேண்டும்: முதல்வர் கேள்வி

தமிழகத்தின் மீது ஏதாவது ஒன்றை ஏன் திணிக்க வேண்டும்: முதல்வர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கும் நிலையில், சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டி ஒன்றில், ' இரு மொழிக் கொள்கையால், கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மும்மொழிக் கொள்கை உள்ள மாநிலங்களில் எத்தனை குழந்தைகளுக்கு 3 மொழிகள் தெரியும். இரு மொழிக் கொள்கை அமலில் தமிழகத்தில் உள்ள கல்வி முறையை விட சிறந்தது என மும்மொழிக் கொள்கை அமலில் உள்ள மாநிலங்கள் ஏதாவது ஒன்றை கூற முடியுமா'எனக்கூறியிருந்தார்.இதனை மேற்க்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 'எக்ஸ்' சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: நமது நிலைப்பாட்டை அமைச்சர் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும்போது,ஒரு சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும் எனக்கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

SRITHAR MADHAVAN
மார் 05, 2025 15:11

ஒவ்வொரு முறையும் இந்தி, ஹிந்தி.. ஏன்? குழப்பத்தில் உள்ள தமிழக மக்கள்., அரக்குக் கடையை நிறுத்துங்கள். தமிழகத்தை மகிழ்ச்சியான மாநிலமாக மாற்ற வேண்டும்., இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க வேண்டாம்


SRITHAR MADHAVAN
மார் 05, 2025 15:08

தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக எப்படி மேம்படுத்துவது, பெருகி வரும் கடன்களை எப்படி குறைப்பது என்பது மிக முக்கியம். லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது எப்படி... சிந்தியுங்கள் அரசியல் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தமிழகத்தை எப்படி பாதுகாப்பது என்று சிந்தியுங்கள்....


Matt P
மார் 05, 2025 12:19

உதயநிதி துணை முதல்வர் பதவியை விரும்பினாரோ இல்லையோ. தனக்கும் குடும்பத்துக்கும் பெருமையாக இருக்க வேண்டும் என்று கருதி மக்களுடைய விருப்பத்தையும் மீறி திணித்ததும் தவறு தானே. மக்கள் தானே அரசு. ஆட்சிக்கு வந்தாலும் அரசு என்பது மக்களுடையது. குறிப்பிட்ட கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுடைய உண்மையான சேவகர்களாக இருப்பார்கள் என்பதால் தான். மக்கள் ஆட்சியை தவறாக யார் பயன்படுத்தினாலும் அவன் மக்கள் துரோகி தான்.


Sundar Pas
மார் 05, 2025 09:48

மாணவர்களின் உரிமையை thadukka நீங்க யார்? தமிழ்நாடு என்ன உங்கள் பட்டன் வீட்டு சொத்தா? அல்லது தமிழர்கள் எல்லோரும் என்ன உங்கள் விட்டு கொத்தடிமைகளை?


Rajasekar Jayaraman
மார் 05, 2025 08:27

உன்னோட பையன நீ திணிக்கிறாயே அது மாதிரியா வாயை திறந்தாலே பொய் புனை சுருட்டு வாயால் வடை சுடுவது தமிழக நிதியை சுருட்டுவது.


shyamnats
மார் 05, 2025 08:23

ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை எதிர்க்க வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் - நீட் தேர்வு, மத்திய ஒன்றிணைந்த கல்வி, போன்றவை. தேவையற்ற இலவசங்களை நிறுத்துங்கள் - மகளிர், மாணவர் உரிமை தொகை, நஷ்டத்தில் இயங்கும் போக்குவரவு நிறுவனத்தில் பெண்களுக்கு இலவசம். ஒரு நாளைக்கு சில பஸ் பயணத்தால் மகளிர் வாழ்க்கை தரம் உயர்ந்து விடும் என்பது போன்றவை. பெண்களுக்கு, மாணவிகளுக்கு பாலியல் வன்முறை பாதுகாப்பு கொடுப்பதே வாழ்க்கையை மேம்படுத்தும்.


Matt P
மார் 06, 2025 01:25

உதயநிதியின் பாட்டன் எழுதி வைத்த பட்டா ..தமிநாடு கருணாநிதிக்கு சொந்தமாக இருந்ததால்


udhaya
மார் 05, 2025 07:53

தமிழ் மற்றும் தமிழர்களையும் ஒழித்தது திராவிட கட்சிகள் தான். தமிழை ஆராய்ச்சி செய்திருந்தால் இந்த உலகத்திற்கே ஒரு தீர்வு கிடைத்திருக்கும்.


udhaya
மார் 05, 2025 07:49

திராவிட கட்சிகள் தான் தமிழ் மொழியை ஒலித்தது. தமிழையும் முருகனையும் ஆராய்ச்சி செய்திருந்தால் இந்த உலகத்திற்கே ஒரு தீர்வு கிடைத்திருந்திருக்கும். போகர் தான் முதன் முதலில் யோகா செய்ததாக கூறுகிறது.


G Mahalingam
மார் 05, 2025 06:59

திமுக தேர்தல் வாக்குறுதி எல்லாம் பாதி மொட்டை அடித்து விட்டு பாதியை அப்படியே விட்டு விட்டு அடுத்தவருக்கு பாதி மொட்டை அடித்து வருவதற்கு சமம். 523 வாக்குறுதியில் ஒரு வாக்குறுதி கூட 100 சதவீதம் நிறைவேற்ற வில்லை .


ramani
மார் 05, 2025 06:59

நீங்களும் ஏன் அநாவசியமாக ராமசாமி நாயக்கன் பற்றி திணிக்கிறீங்க. ஏன் உங்கள் கொள்கைகளை? திணிக்கிறீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை