உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? சீமான் கேள்வி

விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.திருநெல்வேலியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: பாஜ கூட்டணிக்கு வராவிட்டால் விஜய் மீது சிபிஐ விசாரணை தீவிரமடையும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் ரூ.20 லட்சம் வழங்கியதற்குக் காரணம், சிபிஐ விசாரணையில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எதிராகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான். தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? 41 பேர் இறப்புக்குக் காரணமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் சிபிஐ வழக்கு விசாரணை எப்படி இருக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vicgquoy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பாதுகாக்கப் போகிறதா?

மாநில போலீஸ் விசாரிக்கும் போது முன்ஜாமின் கேட்ட ஆனந்த், சிபிஐ விசாரணை வந்த பிறகு முன் ஜாமின் மனுவைத் திரும்பப் பெற்றது ஏன்? விஜயை சிபிஐ பாதுகாக்கப் போகிறதா? கரூர் சம்பவத்தில் எப்ஐஆரில் விஜய் பெயர் சேர்க்கப்படாதது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும். நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்கள் என் பின்னால் வரட்டும். நடிகர்கள் பின்னால் செல்பவர்கள் என் பின்னால் வர வேண்டாம்.ஆளுங்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக்கைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதும்தான் திமுகவின் பாலிசி.

திருப்புமுனை

பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு நடைபெறும். அதில் அனைத்து சட்டசபை தொகுதி வேட்பாளர்களும் முழுமையாக அறிவிக்கப்படுவார்கள். திருச்சியில் மாநாடு நடைபெறுவதால் திருப்புமுனை என்று நினைக்க வேண்டாம், எங்கள் திருப்பம் எங்களது சிந்தனையில் இருக்கிறது. மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் எந்தக் கொம்பாதி கொம்பனையும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Balaji
அக் 28, 2025 23:23

சீமான் அவர்களும் நடிகராக இருந்தவர் தானே.


S Nagarajan
அக் 28, 2025 21:04

பித்தம் தலைக்கேறிவிட்டது.


Easwar Kamal
அக் 28, 2025 20:46

கண்ணா வழக்கு பதிவு என்ன ஜெயிலுக்கே கூட போகலாம். அது விஜய் எடுக்கின்ற முடிவை பொறுத்துள்ளது. தான் தான் அடுத்த முதல்வர் என்று நினைத்து மீண்டும் ஆட்டத்தை துவக்கினால் ஜெயில் உறுதி. நாம் முதல்வர் ஆகுவதற்கு இன்னும் காலம் உள்ளது என்று நினைத்தால் விஜயின் கலை பணி மற்றும் மக்கள் பனி தொடரும். எல்லாம் விஜயின் கையில்.


vbs manian
அக் 28, 2025 17:33

ஏன் விஜய் மீது இவ்வளவு காண்டு. அவர் மேல் இவருக்கு பொறாமை. மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டுள்ளார் விஜய்.


kjpkh
அக் 28, 2025 16:52

சீமானுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு கீழ் தான் கிடைக்கும். அது தெரிந்து தான் விஜய் மீது காண்டாக இருக்கிறார்.


renga rajan
அக் 28, 2025 16:15

சீமான் பல விஷயங்களில் கரெக்ட் அதில் இதுவும் ஒன்று


vadivelu
அக் 29, 2025 07:41

எதற்கு கைது செய்யணும்? பாதுகாப்பு கொடுக்காத நபர்களை அல்லவா தண்டிக்கணும். பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கணிக்க தெரியாத அதிகாரிக்கு இல்லாத தண்டனை எதற்கு முன் அறிவிப்போடு தகுந்த பாதுகாப்பும் கேட்டு வந்த விஜயை கைது செய்யணும்


SIVA
அக் 28, 2025 16:15

இவர் எப்பவும் பெட்டி அரசியல் மட்டுமே செய்கின்றார் , நடிகர் ஜோசப் விஜய் விஷயத்தில் வெளிப்படையாக மாட்டிகொண்டார் , நடிகர் ஜோசப் விஜய் அவர்களால் நடந்த ஒரே நன்மை இந்த சீமான் கொள்கை பீஸ் கிடையாது கோமாளி பீஸ் தான் என்ற உண்மை அவரது நாம் தமிழர் தம்பிகளுக்கு புரிய வரும் ....


Dhanraj V.
அக் 28, 2025 16:13

வயிற்று எரிச்சலில் பேசுகிறார் சீமான்.... வாய்க்கு வந்ததை உலறுகிறார். இவர் உட்கார பழம் விழுந்தது. இது இறந்த காலம். இவர் குருவி என்பதை மறந்து வரும் புயலை எதிர்க்க நினைக்கிறார். விளைவுகளை சந்திப்பார். விஜயை அரசியலில் இருந்து விரட்டி விடலாம் என்று கனவு காண்கிறார். அரச மரங்களும் ஆலமரங்களும் முறிந்து விழப்போகிறது. முருங்கை எம்மாத்திரம்...??


Vasan
அக் 28, 2025 15:39

சீமான் அண்ணே, ஏன் தம்பியை ஆள் காட்டுகிறீர்கள்? ஆள் காட்டுவது தமிழர் பண்பாடல்லவே.


Kumar Kumzi
அக் 28, 2025 15:18

விடியல் அப்பாவின் பொட்டி அன்பளிப்பு கிடைத்துவிட்டது இனி சைமன் வாயிலிருந்து விஜய் பாட்டு தான் வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை