உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலி, கோவைக்கு அம்ரித் பாரத் ரயில் வருமா?

திருநெல்வேலி, கோவைக்கு அம்ரித் பாரத் ரயில் வருமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை - திருநெல்வேலி, சென்னை - கோவை வழித்தடத்தில், தினமும், 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சமீப காலமாக, பல்வேறு பணிகள் காரணமாக, சென்னைக்கு தினமும் வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து நாட்களிலும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, நெரிசல் மிக்க வழித்தடங்களில், 'அம்ரித் பாரத்' ரயில்கள் சேவையை துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து, ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் முருகையன், ஆனந்தன் ஆகியோர் கூறியதாவது: சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் கோவை வழித்தடங்களில், பயணியர் ரயில்களின் தேவை அதிகமாக இருக்கிறது. நெரிசல் மிக்க வழித்தடங்களில், அம்ரித் பாரத் ரயில் சேவை துவங்கினால், பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐ.சி.எப்., ஆலையில், புதிய வகை, 'அம்ரித் பாரத்' ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், வந்தே பாரத் ரயில்களை விட, 12 வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Authilingam S
மார் 23, 2025 21:39

இந்தியன் ரயிவேயில் இருக்கும் ரயில்களும் ரயில் தண்டவாளங்களும் பழுது இல்லாமல் பயணிகள் சரியான நேரத்தில் அவர்கள் சென்றடைய வேண்டிய ரயில் நிலையத்தை அடைந்தாலே மத்திய அரசுக்கு ஒரு பெரிய கும்பிடு போடலாம்.


अप्पावी
மார் 23, 2025 09:09

நேத்திக்கி திருச்சி ரயில் முன்பதிவு நிலையத்தில் வணக்கம் பாரதம் ரயில்லே இடமிருக்கான்னு கேட்டேன். ஆளு மிரண்டு போய் மரியாதையுடன் முன்பதிவு செய்து குடுத்தாரு.


MUTHU
மார் 23, 2025 11:28

முதலில் அனுப்பிவிடவேண்டும் என்ற எண்ணமாயிருக்கலாம்.


கிஜன்
மார் 23, 2025 06:41

அவசியம் வேண்டும் .... நெல்லை ...குமரி ...பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு ஷேடோ ரயில்களாக ...


N Sasikumar Yadhav
மார் 23, 2025 06:17

கோரிக்கையெல்லாம் நன்றாகத்தான் வைக்கிறார்கள் ஆனால் ஓட்டு சாராய வியாபாரிகளுக்கு மட்டுமே போட்டால் மத்தியரசின் வளர்ச்சி திட்டங்கள் எப்படி உடனடியாக வரும் . வரும் காலதாமதாக


Appa V
மார் 23, 2025 05:15

பெரியார் விரைவு ரெயில் அல்லது கருணாநிதி விரைவு ரெயில் என்று பெயர் வைக்க கோரிக்கை விடலாமே


Kasimani Baskaran
மார் 23, 2025 06:12

அப்பா வுக்கு பின் வி போட்டு விளையாட்டுக்காட்டுவதை வன்மன் என்று எடுத்துக்கொள்ளலாமா?


சமீபத்திய செய்தி