உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழுமா?

இரு பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழுமா?

'சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அக்கூட்டணிக்கு எதிரான சிந்தனையில் இருக்கும் இரு பெரும் கட்சிகள் ஒன்று சேர்ந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 'அதற்கு நெருடலாக இருக்கும் சில விஷயங்களை சரி செய்தால், அது சாத்தியமாகும்' என, பா.ஜ., டில்லி தலைமைக்கு, உளவுத்துறை அதிகாரிகள் வாயிலாக தகவல் போயுள்ளது. அதனால், பா.ஜ., சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு, தமிழக அரசியல் களத்தில் திருப்பங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nn5tv9ze&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது குறித்து, மத்திய உளவுத்துறை மற்றும் பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் தி.மு.க.,வை, வரும் தேர்தலில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என, பா.ஜ., தலைமை உறுதியாக இருக்கிறது. அதனால் தான், லோக்சபா தேர்தலில் வெளியேறிய அ.தி.மு.க.,வை மறுபடியும் பா.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வந்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பழனிசாமி பரிந்துரை

அதன்பின், கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருக்கப் போவது யார் என்பதில் துவங்கிய முரண், இரு தரப்பிலும் இன்று வரை தொடர்கிறது. எனினும், இந்த கூட்டணி அமைவதில் எதிர்ப்பாக இருந்த அண்ணாமலையை, தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய தலைவராக, பழனிசாமி பரிந்துரைத்த நாகேந்திரனை நியமித்தது, மத்திய பா.ஜ., தலைமை. அதன் பிறகும், இரு கட்சிகள் இடையே இன்னமும் இணக்கமான போக்கு இல்லை. இந்நிலையில், திடீர் அரசியல் வரவான நடிகர் விஜயின் த.வெ.க.,வுக்கு, தமிழகத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாக, பல மட்டங்களில் இருந்து பா.ஜ., தலைமைக்கு தகவல் போய் கொண்டே இருக்கிறது. விஜய் சென்ற இடங்களில் எல்லாம் அபரிமிதமான மக்கள் கூடுவதோடு, அதெல்லாம் ஓட்டுகளாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், பல கட்சி தலைவர்களும் விஜயை உற்று நோக்குகின்றனர். இந்நிலையில், 'யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவேன்; ஆனால், அரசியல் எதிரியான தி.மு.க.,; கொள்கை எதிரியான பா.ஜ.,வோடு மட்டும் நேரடியாகவோ, மறைமுகமாகவே கூட்டணி சேர வாய்ப்பில்லை' என, விஜய் அதிரடியாக அறிவித்தார். அக்கருத்தில் அவர் உறுதியாக இருப்பதால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணைய முடியாத சூழல் உள்ளது. சமீபத்தில் கூட, த.வெ.க, இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் இதை உறுதிபட தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பா.ஜ., தரப்பில், பல்வேறு கட்டங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்தி, மக்கள் கருத்து அறியப்பட்டு இருக்கிறது. கூடவே, மத்திய உளவுத்துறை அதிகாரிகளும், தமிழகம் முழுதும் மக்கள் மனநிலையை அறிய ரகசிய சர்வே நடத்தி, தங்கள் அறிக்கையை, டில்லியில் ஆட்சி மேலிடத்தில் இருப்போருக்கு அளித்துள்ளனர். தி.மு.க., கூட்டணி வலுவாக இருப்பதால், ஏற்கனவே பெற்ற ஓட்டுகளில் பெரிய அளவில் சிதைவுகள் இருக்க வாய்ப்பில்லை. மேலும், தி.மு.க.,வுக்கு எதிரான சக்திகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, த.வெ.க., கூட்டணி என தனித்தனியாக பிரிவதும், தி.மு.க., கூட்டணிக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

எதிரான சக்திகள்

அதனால், தி.மு.க., வுக்கு எதிரான சக்திகள் ஒன்றுசேர வேண்டிய கட்டாயம் உள்ளது. முக்கியமாக, தி.மு.க.,வுக்கு எதிரான வலுவான இரு சக்திகளான அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் ஒன்று சேர வேண்டும். அதற்கு, பா.ஜ., நெருடலாக இருக்கிறது. அதனால், தி.மு.க.,வை வீழ்த்தும் விஷயத்தில் பா.ஜ., உறுதியாக இருந்தால், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமைய, பா.ஜ.,வே ஒத்துழைக்க வேண்டும் என, சர்வே முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பா.ஜ., தலைமையில், தமிழக கூட்டணி தொடர்பான சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. பா.ஜ.,வைப் பொறுத்தவரை, தேசிய கட்சி என்பதால், 2029 லோக்சபா தேர்தல் தான் பிரதான நோக்கம்.

ஆலோசனை

அதனால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, எந்த எல்லைக்கும் சென்று, யாருடனும் சமாதானமாக போகலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. ஒருவேளை, அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமையும்பட்சத்தில், பா.ஜ., தனித்து விடப்பட்டால், மோசமான தோல்வி கிடைக்கும் என்பதால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையும் பா.ஜ., தரப்புக்கு உள்ளது. எனவே, கடந்த லோக்சபா தேர்தலைப் போல, சிறு கட்சிகளுடன் இணைந்து, பா.ஜ., தலைமையில் ஒரு அணி அமைத்து, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என, பா.ஜ., தலைமைக்கு சிலரால் ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இவை, பா.ஜ., தலைமை மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயங்கள். அது முழு வேகத்தில் செயல்பாட்டுக்கு வருமா அல்லது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியே தொடருமா என்பது, அடுத்த சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்து விடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Anantharaman Srinivasan
நவ 07, 2025 23:05

தப்பித்தவறி விஜய் ஆட்சியை பிடித்தால் 3 வது ஊழல் கட்சி உருவாகும்.


Raja
நவ 07, 2025 22:06

கொஞ்சமாவது நம்புற மாதிரி கதை சொல்ல வேண்டுகிறேன்....


saravanan
நவ 07, 2025 20:53

தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி மலர வேண்டு்ம் என்பதே நாட்டின் நலம் விரும்பும் ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும் போது பாஜக தலைமையும் அத்திசையை நோக்கி பயணிப்பதே சிறப்புடையதாக இருக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 20:21

இதை சாக்காக வைத்து அண்ணாமலை தனிகட்சி ஆரம்பித்து , தேர்தலில் நின்று வோட்டுக்களை அள்ளி அடுத்த முதல்வர் ஆகிவிடலாமே.


Venkat esh
நவ 07, 2025 22:54

. அண்ணாமலை அதற்கு தகுதியானவர் தான்... ஆனால் இங்கு தான் கேடு கெட்ட ஊ₹பிகளும், 21ம் பக்கத்து கூட்டமும், 500 ரூபாய்க்கு ஓட்டையும் சேர்த்து விற்கும் கூட்டமும் இருக்கிறதே.... அவைகள் இருக்கும் வரை நிலைமை மாறாது... ஆனால் மாற்றம் வரும்... அது வரை சாக்கடைகளை சகித்துக் கொள்வோம்


சிட்டுக்குருவி
நவ 07, 2025 20:18

நீதிதுறை தன்கடமைகளை சரிவர செய்தால் தமிழக மக்கள் இவ்வளவு இன்னல்களை அனுபவிக்கதேவை இல்லை .என்று தணியும் இந்த சோகம் என்று கவலைப்படவும் தேவை இல்லை. அரசாட்சி என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி, அடிப்படை வசதிகளை அபிவிருத்திசெய்து மக்களிடையே ஒற்றுமையையும்,இணக்கத்தையும் வளரச்செய்யும் ஒரு அங்கமாகத்தான் இருக்கவேண்டும் .இதற்க்கெல்லாம் எதிர்மாறாக ஆட்சியை நடத்துவது அரசியல் சட்டத்திற்கு மாறானது .அரசு ஒரு வியாபார அமைப்பு இல்லை .சாராயம் விற்பதையும் ,மாநிலத்தின் வளங்களையும் கொள்ளையடிப்பதை தவிர வேறு ஒன்றும் இந்த அரசில் நடைபெறவில்லை..மனசாட்சி என்பது அரசியல் அமைப்பின் மூன்றுதூண்களிடமும் இருப்பதாக தெரியவில்லை .அதனால் மாற்றம் கேள்விக்குறியே ?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 07, 2025 19:31

எப்படின்னாலும் பிஜேபிக்கு டெபாசிட் கெடைக்காது


M Ramachandran
நவ 07, 2025 19:28

தமிழ்நாட்டில் பாஜக தவளையும் எலியும்போன்ற நட்புடன் தேர்தலை சந்திக்க முயலுகிறது. அதன் நற் பலன் ஸ்டாலினுக்கு. பழயபடி உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்ற பல்லவி தான்.திமிரும் தலைக்கனமும் ஓன்றுசேர உள்ள உருவத்துடன் உறவு.


GoK
நவ 07, 2025 16:55

மாற்றம் தேவை, நிகழும், தமிழகம் விடிவு பெறும்.


CUSTOMER SERVICE. IPLABS
நவ 07, 2025 15:55

டிசம்பர் மாத இறுதியில் எல்லாம் ஒன்று சேர்ந்து விடும். விட்டுக்கொடுத்தல் கெட்டூப் போவதில்லை . மக்கள் இலவசத்துக்கு மதி மயங்க கூடாது. மதுவை படிப்படியாக தவிர்க்கா விட்டால் தமிழகம் இன்னும் மோசமான நிலைக்கு செனருவிடம்


T.sthivinayagam
நவ 07, 2025 13:15

கடந்த காலங்களில் அதிமுகாவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் சரிவையே சந்தித்து உள்ளன ,பாமகா தேமுதிக விசிகா மதிமுக ஏன் பாஜாகாவும் சரிவை தான் சந்தித்து உள்ளது என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


சமீபத்திய செய்தி