உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: காங்கிரசுக்கு ஆறுதல் பரிசு கிட்டுமா?

இது உங்கள் இடம்: காங்கிரசுக்கு ஆறுதல் பரிசு கிட்டுமா?

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மத்தியில் ஆளும் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்ப வலுவான எதிர்க்கட்சி தேவை என, சில மாநில கட்சி தலைவர்கள் முயற்சித்து உருவாக்கியது தான், 'இண்டியா' கூட்டணி. இவர்களுக்கு பொதுவான கொள்கை, 'மோடி மீண்டும் பிரதமராக வந்துவிடக் கூடாது' என்பது மட்டும் தான். மற்றபடி மோடி ஆட்சியில் வேறு எந்த குற்றச்சாட்டையும் இவர்களால் சுமத்த முடியவில்லை.அதே நேரம், இண்டியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் நற்சான்றிதழ் என்னவென்று பார்த்தால், ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்., தமிழகத்தின் தி.மு.க., என எல்லா கட்சிகளுமே ஊழலில் ஊறி திளைத்தவை தான். இந்த கட்சிகள், பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றத்துக்கு நடையாய் நடக்கின்றன.இதற்கு மத்தியில், இண்டியா கூட்டணி பா.ஜ.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து பல ஊடகங்களும் எழுதி தள்ளின. பொதுவாக கிராமங்களில் சொல்வர்... 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பர். அதுபோல, இண்டியா கூட்டணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, கூட்டணிக்குள் முட்டல், மோதல்கள் உருவாகி விட்டன.மேற்கு வங்கம், பஞ்சாபில் காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை என, திரிணமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் திட்டவட்டமாக அறிவித்து விட்டன. இது, அடுத்தடுத்து பல மாநிலங்களிலும் தொடரும் என்றே தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் தான், தி.மு.க., - காங்., கூட்டணி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து நிற்கிறது.வடமாநிலங்களில் காங்., கட்சி புறக்கணிக்கப்படுவதை மனதில் வைத்து, இங்கும் அக்கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டை, தி.மு.க., குறைக்காமல் இருந்தாலே, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய ஆறுதல் பரிசாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

VENKATASUBRAMANIAN
ஜன 29, 2024 08:40

எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் உள்ளது


sankar
ஜன 29, 2024 08:29

இப்படியும் நடக்கலாம் - திமுக அறிவிப்பு - முரசொலி தலையங்கம்-"அயோத்தியில் மசூதியும் கட்டுவதாக உலகம் போற்றும் பாரத பிரதமர் அவர்கள் எங்களிடம் உறுதிமொழி கூறி இருக்கிறார் - உண்மையான மதசார்பின்மை என்பது பிஜேபி கட்சியில் மட்டுமே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம் - காங்கிரஸ் என்னும் நாட்டுக்கு உலை வைக்கும் தீய சக்தியில் இருந்து விலகி நிற்கிறோம்"


ramesh
ஜன 29, 2024 20:12

உண்மையான மத சார்பின்மை பிஜேபி கட்சியில்? சும்மா காமெடி பண்ணாதீங்க சங்கர்


பேசும் தமிழன்
ஜன 29, 2024 07:50

தமிழகத்தில் எடப்பாடி விட்டு கொடுத்து.... பலமான கூட்டணி அமைக்க வேண்டும்... யார் ஆட்சிக்கு வருகிறார்கள்.... அவர்களுக்கு தமிழக மக்கள் ஓட்டு போட வேண்டும்.... பிஜெபி ஆட்சிக்கு வந்தால் கான் கிராஸ் கட்சிக்கும்... கான் கிராஸ் ஆட்சிக்கு வந்தால் பிஜெபி கட்சிக்கும் ஓட்டு போட கூடாது !!!


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜன 29, 2024 07:40

டெல்லியில் போய் கெத்தாக கோலோச்சலாம் என்று மலரும் மலருமென்று ஆசையோடு வைத்த புள்ளிக் கூட்டணி மலராமல் கருகிப் போனது திமுகவிற்கு பெரிய இழப்புதான் என்ன செய்வது இனி தமிழகத்துக்குள்ளயே காங்கிரஸ் கட்சியோட கூட்டணி வச்சு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்!


Ramesh Sargam
ஜன 29, 2024 07:35

காங்கிரஸ், திமுகவை நம்பி மோசம்போக கூடாது.


கண்ணன்,மேலூர்
ஜன 29, 2024 07:18

இந்த லட்சணத்தில் இங்க ஒருத்தர் வித்தியாசமான வியாக்கியானத்தை கூறினார், யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று இப்போது அவர் என்ன கூறுவார் என்று தெரியல.


Kasimani Baskaran
ஜன 29, 2024 05:38

தமிழகத்தில் மட்டும் கூட்டணி தாக்குப்பிடிப்பதால் நாற்பது எம்பிக்களை வைத்து ஆட்சியமைத்து விட முடியாது என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். என்று சனாதனத்தை ஒழிப்போம் என்றார்களோ அன்றே இந்திக்கூட்டணிக்கு சாவு மணி அடித்துவிட்டார்கள்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை