உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்னீர் ஊரில் பழனிசாமி விமர்சித்து பேசுவாரா?

பன்னீர் ஊரில் பழனிசாமி விமர்சித்து பேசுவாரா?

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படுத்த, மார்ச் 1ம் தேதி தேனி மாவட்ட பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., சார்பில், வரும் 25ம் தேதி முதல் மார்ச் 1 வரை, ஐந்து நாட்கள் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடக்கும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்கள், அவற்றில் சிறப்புரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, மார்ச் 1ம் தேதி தேனி நகரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பழனிசாமி பேச உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, சிலர் வலியுறுத்த துவங்கி உள்ளனர். அவரை மீண்டும் சேர்க்கும் எண்ணம் இல்லை என்பதை, கட்சியினருக்கு தெரியப்படுத்துவதற்காகவே, தேனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அக்கூட்டத்தில், பன்னீர்செல்வத்தை மறைமுகமாக விமர்சித்து பேசவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் இடங்களை, கட்சி தலைமை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை