உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: பிரேமலதாவின் கறார் பேச்சு கைகொடுக்குமா?

இது உங்கள் இடம்: பிரேமலதாவின் கறார் பேச்சு கைகொடுக்குமா?

கோ.தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய கடிதம்:

நடிகரும், தே.மு.தி.க., நிறுவன தலைவருமான விஜயகாந்த், கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவருக்கு, லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின், இவருக்கு தான் அதிக கூட்டம் திரண்டது.திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அவருடைய குணநலன், உதவும் மனப்பான்மை, மனித நேயத்திற்காக தான் அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. அந்த கூட்டத்தில் அவருடைய கட்சி தொண்டர்கள், 20 சதவீதத்தினர் தான்; மீதி உள்ளோர் அவர் மீது அன்பு கொண்ட மற்றும் மாற்றுக்கட்சியில் உள்ளவர்களும், பொதுமக்களும் தான்.தற்போது லோக்சபா தேர்தல் வரவிருக்கும் சூழலில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க., பொதுச் செயலரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா கூட்டணி சம்பந்தமாக பேசி வருகிறார்.தங்களது கட்சிக்கு, 14 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் எந்தக் கட்சி கொடுக்கிறதோ, அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று கூறி வருகிறார். இவர், விஜயகாந்த் இறப்பிற்கு வந்த மக்கள் கூட்டத்தை வைத்து இவ்வாறு பேரம் பேசி வருகிறார்; அவருக்கு இன்னும் யதார்த்த நிலை புரியவில்லை.தன்னை, ஏதோ ஜெயலலிதா போன்ற மக்கள் தலைவி என்றும் நினைக்கிறார். கடந்த காலங்களில், விஜயகாந்த் உயிரோடு இருந்தபோதே, அந்த கட்சி சந்தித்த தேர்தல்களில் பிரகாசிக்கவில்லை என்பதை உணர வேண்டும்.மேலும், தன் கட்சியின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள, எந்தவித பேரமும் பேசாமல், நிபந்தனை விதிக்காமல், வலிமையான கூட்டணியில் சேர்ந்து, கிடைக்கும் தொகுதிகளை பெற்று தேர்தலை சந்தித்தால் அரசியலில் நிலைத்திருக்கலாம்.அதை விடுத்து, கறாராக நடந்து கொண்டால், அடுத்த தேர்தலுக்குள் தே.மு.தி.க., காணாமல் போய் விடும் என்பதை பிரேமலதா உணர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

duruvasar
பிப் 17, 2024 15:26

தேர்தல் தேதி அறிவிக்கும்வரைதானே , அவங்க வாய், அவங்க பேச்சு சுதந்திரம் பேசிட்டு போகட்டுமே


Mohan das GANDHI
பிப் 17, 2024 14:26

மேடம் பிரேமலதா நன்கு புரிந்துகொள்ள வேண்டும் தேமுதிக கட்சிக்கு பெரிய பெயரோ மதிப்போ கிடையாது.இது பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் வளரவில்லை என்பதே உண்மை. மறைந்த கேப்டன் விஜயகாந்த் மிக நல்ல மனிதர் நல்ல உள்ளம் படைத்தவர் MGR க்கு பிறகு அவரை தான் நடிகர்களிலேயே அதிகமாக மக்களுக்காக உதவி செய்தவர். இவரால் பலர் நடிகர்கள் பயன் பெற்றுள்ளனர் அதை மறந்தும் சிலது சுற்றுகிறது கண்டும் காணாமலும் என்பதே இது தான் நடிகை KAKA காக்கா கூட்டங்கள் என்பதே பாஜக அணியுடன் கூட்டணி சேர்ந்து தலைவர் திரு அண்ணாமலை டிப்ஸ் இடம் பேசி 2 MP சீட்டும் மேலும் HONERABLE MP IN RAJYA SABHA THAT BJP HON'PM CAN DO B4CAUSE HE RECOGNAISED LATE.CAPTON VIJAYAKANTH WILL BE GOOD FOR DMDK. அதிக சீட்டுக்குக்காக அங்கும் இங்கும் அலைவது வேஸ்ட் 2 MP சீட்டு உங்கள் தமயன், உங்கள் மகனுக்கும் வாங்கிக்கொள்ளுங்கள் அதுவே போதுமானது ஜெயிக்கவும் முடியும். 14 சீட்டு கேட்டு அடம்பிடித்தால் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது கொடுக்கவும் மாட்டார்கள் அதிமுகவோ அல்லது பாஜகவோ என்பதே காரணம் இருப்பதே 39 சீட்டுகள் அதில் 390 பேர்கள் வேட்பாளருக்கு வரிசையில் காத்திருக்கிறார்கள் இப்படி பங்கு போடுவது ? ஆசை யாரை விட்டது? பேராசை பெரு நஷ்ட்டம்


Anand
பிப் 17, 2024 11:28

இந்த பெண் இப்படி கறார் கறார் என பண/பதவி வெறி பிடித்து ஆடியதால் தான் அந்தாளு போய் சேர்ந்துவிட்டார்..... இன்னமும் திருந்திய பாடில்லை...


NACHI
பிப் 17, 2024 09:57

வெற்றி பேற பாருங்க ...இல்லை என்றால் ....கட்சி காணாம போய்டும்


veeramani
பிப் 17, 2024 09:50

விஜகாந்த்தின் கட்சி.. தற்சமயம் பாண்டவர்கள் நிலைமையில் உள்ளது இதுதன் நிதர்சனமான உண்மை. விஜயகாந்திற்கு விருது கொடுத்து அவரை அழகுபடுத்தியது பா ஜா க. இவர்கள் ஏன் டி ஏ உடன் கூட்டணி வைத்து எலெக்ஷன் சந்திக்கலாம்.


நரேந்திர பாரதி
பிப் 17, 2024 09:44

பா.ம.க, தே.மு.தி.க, வி.சி.க, ம.தி.மு.க, லெட்டர் பேட் கட்சிகளுக்கெல்லாம் பெரிய கொள்கைகளோ/ கோட்பாடுகளோ கிடையாது... விஜயகாந்துடன் கட்சி அடக்கம் செய்யப்பட்டு விட்டது


chennai sivakumar
பிப் 17, 2024 09:38

அரசியலில் இருந்து ஒதுங்கி நின்று சமூக சேவைகள், நற்பணிகள் செய்து கேப்டன் அவர்கள் புகழை நிலத்து இருக்க செய்வது மட்டுமே நன்மை பயக்கும். சும்மா ஃபிலிம் காட்டினால் காணாமல் போய் விடுவார். கேப்டன் அவர்கள்.மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தை மனதில் வைத்து கணக்கு போடுகிறார். அந்த கூட்டம் captain அவர்கள் செய்த நற்பணிகலுக்காக நன்றி தெரிவிக்க வந்த கூட்டமே தவிர வாக்கு வங்கி அல்ல என்பதை உணர மறுக்கிறார். பட்டு திருந்தினாலவது சரி.


Sathyam
பிப் 17, 2024 10:42

ஹலோ நீங்க வேற கேப்டன் மண்ணு எல்லாம் வெறும் சினிமா தான் நிஜ வாழ்க்கைல இந்த விஜயகாந்த் ஜீரோ தான் , கட்சியும் மாபெரும் சரிவு இந்த கட்சி காயலங்கு கடை தான் சீக்ரம் , விஜயகாந்த் இருக்கும்போதே இந்த கட்சி காலணாவுக்கு பிரயோஜனம் இல்லை


வீரா,
பிப் 17, 2024 08:38

30 லோக் சபை 10 ராஜ்ய சபை இடங்களையாவது கேட்டு பெற வேண்டும். அடுத்த தேர்தலில் பிரேமலதாவே மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்ய வேண்டும். பகல் தூக்கம் பகல் கனவில் முடிந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 07:55

விஜயகாந்த் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த சொத்துக்களை இவர் தொடர்ந்து கட்சி நடத்தி அழிப்பாரா ????


Ramesh Sargam
பிப் 17, 2024 07:35

கறார் பேச்சு எல்லாம் கைகொடுக்காது.


Sathyam
பிப் 17, 2024 10:40

கறார் பேசிச்சு எல்ல இவளோட புருஷன் இருக்கும்போதே பருப்பு வேகவில்லை , இவை என்னமோ விடுத்த பேசாம போயி திமுக கிட்ட உன்னத அதட்டல் குரல் குடுங்க, ஒரு மண்ணும் கிடைக்காது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை