உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்திக்கு செல்ல போவது ஸ்டாலினா, துர்காவா?

அயோத்திக்கு செல்ல போவது ஸ்டாலினா, துர்காவா?

அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி, 22ல் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர், மாநில முதல்வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. பிரதமர் மோடி உட்பட பல பா.ஜ., முதல்வர்கள் பங்கேற்றனர்.ராமர் கோவில் இப்போது முழுதுமாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 150 அடி உயரமான, துவஜஸ்தம்பம் நிறுவப்பட உள்ளது. இம்மாதம் 25ம் தேதி, இது ஒரு பெரும் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மற்ற முதல்வர்களும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்புகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2i5tqfoh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக, அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளதாம். தமிழக முதல்வருக்கும் அழைப்பிதழ் உண்டு. ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போதும், தமிழக முதல்வருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது; ஆனால், அவர் பங்கேற்கவில்லை.தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் அயோத்தி செல்வாரா? ஏற்கனவே, 'ஹிந்து மத விரோதி கட்சி தி.மு.க.,' என, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். 'நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிறுபான்மையினர் அதிக அளவில் ஓட்டளிப்பர்' என சொல்லப்படும் நிலையில், 'அயோத்தி சென்றால் சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில், முதல்வர் ஸ்டாலின் அயோத்தி வர மாட்டார்' என்கின்றனர் டில்லி பா.ஜ.,வினர்.'தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுக்க உள்ள கோவில்களுக்கு சென்று வரும் தன் மனைவி துர்காவை அயோத்திக்கு அனுப்புவாரா முதல்வர்' எனவும், டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

HoneyBee
நவ 25, 2025 12:24

வரலன்னு யார் அழுதா.


Mani . V
நவ 18, 2025 04:22

இது நாட்டுக்கு மிகவும் தேவையான பிரச்சினையா அந்த கொள்ளைக் கூட்டத்தில் இருந்து யார் போனால் என்ன?


Anantharaman Srinivasan
நவ 16, 2025 22:38

அயோத்திக்கு செல்ல போவது ஸ்டாலினா, துர்காவா? பட்டிமன்றம் வைத்து முடிவு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயமல்ல இது. கடந்து போவோம்.


T SIVAKUMAR
நவ 16, 2025 14:47

திருட்டுத்தனமாக போயிட்டு வருவார்


சூர்யா
நவ 16, 2025 13:31

ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் ? என்பவர்களுக்கு அயோத்தியில் என்ன வேலை?


Sun
நவ 16, 2025 11:59

இவங்க போனா என்ன போகலன்னா என்ன!


Modisha
நவ 16, 2025 11:57

வரவே வேண்டாம் .


ramesh
நவ 16, 2025 11:21

உங்கள் வீட்டில் தினமும் இப்படித்தான் நடக்கிறதா பரக்கத் அலி


vivek
நவ 16, 2025 12:52

நேரா பதில் சொல்லு....எதுக்கு சொம்பு தூக்குறாய்


sundarsvpr
நவ 16, 2025 11:15

ஸ்டாலின் இப்போது நாஸ்திக வாசி. பெரிய பதவியை வகித்து வருகிறார். காரணம் பூர்வ ஜென்ம நல்ல பலன் தான் காரணம். ஸ்டாலின் துணைவியார் திருக்கோயில் கோயிலாக சென்று பிரார்த்தனை செய்வது குடும்ப நலனுக்காக. குடும்பத்தில் உதய நிதியும் ஒருவர். இப்படியும் அமையலாம் ஸ்டாலின் பதவி அவர் காலத்திலே உதயநிதிக்கு கிடைக்கலாம். துர்கா அம்மையார் பிராத்தனையும் காரணமாக இருக்கலாம்.


duruvasar
நவ 16, 2025 10:16

மன நிம்மதிக்காக ஹரித்வார் போவதை சொன்னவர் டெல்லியிலேயே இறங்கி விட்டார் என்ற செய்தியை படித்தோம். அதுபோல பொற்கோவிலுக்கு போகிறவர் இடையிலும் இறங்கலாம். திராவிடர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்.


சமீபத்திய செய்தி