உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குரூப் - 1 தேர்வு வயது வரம்பு 49 ஆக உயர்த்தப்படுமா?

குரூப் - 1 தேர்வு வயது வரம்பு 49 ஆக உயர்த்தப்படுமா?

சென்னை:'குரூப் - 1' தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நத்தினர்.சென்னை எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் கலீல்பாஷா, செயலர் திருக்குமரன், பொருளாளர் கோபிநாத் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் கூறியதாவது:டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை, 49 ஆக உயர்த்த வேண்டும். குரூப் - 2 முதன்மை தேர்வை கொள்குறி முறையில் நடத்த வேண்டும். அரசு பணிகளில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு ரத்தாகும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MythiliAmaran
ஜன 15, 2025 13:22

I thank Dinamalar for publishing the news related to tnpsc group 1 age limit increase.


MythiliAmaran
ஜன 15, 2025 13:15

Request concerned authorities to increase the age limit for tnpsc group 1 . Telangana state has increased age limit for group 1 as 46 even for general category upon that they have given age relaxation as 5 to 10 years based on community , etc.,. Moreover here in Tamilnadu tnpsc group 1 exams are not conducted regularly per year. Approximately for 25 years 10 to 12 group 1 exams are only conducted.


Sivakumar P
ஜன 07, 2025 11:20

நல்ல அனுபவத்தோடும் பக்குவத்தோடும் பணியாற்ற வயது உயர்வு அவசியம்


MythiliAmaran
ஜன 15, 2025 13:24

Correct Sir.


MythiliAmaran
ஜன 15, 2025 13:32

மிகவும் சரி .


சமீபத்திய செய்தி