உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!

நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாளை (பிப்.11 ) தைப்பூசத்தை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. நாளை (பிப்.11ம் தேதி) செவ்வாய்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. எனினும் பதிவுத்துறையில் பத்திரப்பதிவுகள் வழக்கம் போல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பத்திர பதிவுத்துறை அறிக்கை: பொது மக்களின் நலன் கருதி, அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்கலகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான தைப்பூச திருநாள் அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைபோலவே இந்தாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு, விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அறிவுரை வழங்கியிருந்தது. ஆனால், தமிழகத்தில் மூன்று பதிவுத்துறை அலுவலகங்களை தவிர, வேறு எங்கும் பதிவு நடக்கவில்லை. எல்லா பதிவு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sridhar
பிப் 10, 2025 21:06

ஹிந்து பண்டிகை தானே , லீவு எதற்கு. இது மத சார்பற்ற தமிழகம் . அமைதி பூங்கா .


Bye Pass
பிப் 10, 2025 20:34

தைப்பூசத்துக்கு டாஸ்மாக் விடுமுறை உண்டா ?அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை சர்ச் செல்வதற்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக மது கடைகளுக்கு விடுமுறை ..


ஆரூர் ரங்
பிப் 10, 2025 20:32

சார் .இது போல ரம்ஜான், பக்ரீத், ஈஸ்டர் விடுமுறைகளன்று முகூர்த்த நாட்களாக இருந்தால் பணிக்கு வரக் கட்டாயப்படுத்துவீரா? தமிழர்கள் பண்டிகை தைப்பூசம் என்பதால் இப்படியா சார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை