உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வருமா?: ரூ.150 கோடியில் அரசு அவசர திட்டம்

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வருமா?: ரூ.150 கோடியில் அரசு அவசர திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோடை காலத்தில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:தமிழகத்தில் 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 150 கோடி ரூபாய், குடிநீர் வினியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் வாயிலாக குடிநீர் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தற்போது செயல்படும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரிக்க வேண்டும்.நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், குடிநீர் பிரச்னைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண, கமிஷனர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்பட, தடையின்றி மின்சாரம் கிடைப்பதை, மின் வாரிய தலைவர் உறுதி செய்ய வேண்டும்.ஊராட்சி பகுதிகளிலும் மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இப்பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்படாமல், அனைத்து மாவட்டங்களையும், தலைமை செயலர் கண்காணிக்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் நேரில் சென்று, குடிநீர் வினியோகப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். பற்றாக்குறை உள்ள இடங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு, அடுத்த இரண்டு மாதங்களில் குடிநீர் பற்றாக்குறையால், நம் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

sethu
ஏப் 28, 2024 16:57

மழை வந்தாலும் நிதி ஒதுக்கீடு வெயில் அடித்தாலும் நிதி ஒதுக்கீடு


G.Kirubakaran
ஏப் 28, 2024 16:27

தண்ணீர் எங்கிருந்து கொண்டு வருவார்கள் எந்த ஏரி ,குளம் தூர் வாராமல் வறண்டு பொய் உள்ளன யார் பொறுப்பு


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 28, 2024 11:42

எப்பொழுது பார்த்தாலும் குடிநீர் மட்டும் பிரச்சினை இல்லை மக்கள் குழிக்க பாத்திரம் கழுவ துணி துவைக்க காலைக்கடன்களை முடிக்க கை கால் முகம் கழுவ இதற்கெல்லாம் தண்ணீர் வேண்டும் அதற்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் கோடி என்றால் முழுமையாக அது திட்டத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் தோனான் துருத்தி பாக்கெட் செல்ல கூடாது


shyamnats
ஏப் 28, 2024 11:04

இவர்கள் தண்ணீர் பஞ்சத்திற்கு திட்டமிடுவது கடுங்கோடையில் திட்டம் முடிவதற்குள் பருவமழை பெய்து விடும் பின்னர் அடுத்த கடுங்கோடையில் ஏதாவது நிதி ஒதுக்கி திட்டமிட வேண்டியதுதான் ஒதுக்கல் கதை தொடறும்


sankar
ஏப் 28, 2024 09:34

மங்குனி மாதிரியாரே - உடனடியாக இதற்கொரு குழு அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்


Shekar
ஏப் 28, 2024 09:31

யோவ் ஆபிசர், என்னய்யா வெறும் கோடியா? பெருசா திட்டம் போடுங்கய்யா நதி மட்டுமா காய்ஞ்சி கிடக்கு, நாங்களும்தானே


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஏப் 28, 2024 08:54

வெயில் காலத்துல மக்களை தண்ணீருக்கு நாயா அலைய விடுவோம் அதே மழைக் காலத்துல மக்களை வெள்ளத்தில் மீனா நீந்த விடுவோம் திராவிட மாடல்னா என்னன்னு கேட்கிறவன்களுக்கு 4000 கோடி பேக்கேஜை ஆட்டையப் போட்டு அல்வா கொடுத்துட்டு இப்ப 40000 கோடி இழப்பீடு கேட்கிறோம் பாத்தியா அதுதான்டா திராவிட மாடல்.


குமரி குருவி
ஏப் 28, 2024 08:16

கை செலவுக்கு 150 கோடிகள் சுவாஹா


அப்புசாமி
ஏப் 28, 2024 08:12

மத்திய அரசிடம் ஜல்ஜீவன் குழாய்களை பதிக்கச் சொல்லுங்க. தண்ணி கொட்டும்.


Chandran,Ooty
ஏப் 28, 2024 09:11

யோவ் வயசாச்சுன்னா பேரன் பேத்திகளை கொஞ்சி விளையாடுய்யா அதை விட்டு ஏன்யா இப்படி தினம் பொறாமை வன்மப் பதிவா போட்டுக்கிட்டு திரியிற?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 28, 2024 11:47

ஜல்ஜீவனில் குழாய் பதிக்கும் போது பணத்தை திராவிட கழகங்கள் ஆட்டையை போடாமல் இருந்தால் தான் தண்ணீர் கொட்டும் ஆட்டையை போட்டு ஸ்டிக்கர் ஒட்டினால் தண்ணீர் வராது மாநில உரிமை மாநில உரிமை என்று கூவினால் மட்டும் பத்தாது மேலாண்மை என்னும் மேனேஜ்மென்ட் அதாவது நிர்வாகத்தை நல்ல விதத்தில் நடத்த தெரிய வேண்டும் அன்பு அப்புசாமி அவர்களே


J.V. Iyer
ஏப் 28, 2024 08:11

இந்த கோடியில் எவ்வளவு கமிஷன்? மேலும் தேர்தல் தொலைவில் இல்லை இல்லாவிட்டால் பாஜககாரர்கள், மற்றும் அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலைஜி சும்மா பிரித்து மேய்ந்துவிடுவார்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ