உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிக்காக திருமா போராடுவாரா? முருகன் கேள்வி

மாணவிக்காக திருமா போராடுவாரா? முருகன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையில் நடந்த சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசு துாக்கி எறியப்பட வேண்டும் என்பதற்காக, மிகப்பெரிய சபதத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எடுத்துள்ளார். தி.மு.க., அரசு, குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும்.எப்.ஐ.ஆர்., வெளியானது, அவமானமான விஷயம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்.அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு, அவர் போராட்டம் நடத்துவாரா? நடத்தினால் நன்றாக இருக்கும்.இவ்வாறு முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Haja Kuthubdeen
டிச 30, 2024 16:19

தேர்தல் கூட்டணி..கொள்கை கூட்டணின்னு யாருக்குமே புரியாத விளக்கத்தை கொடுப்பார்..தேவையா!!!????


Rajarajan
டிச 30, 2024 13:01

நோ நோ. இப்படி கேட்க கூடாது. வேறுமாதிரி கேட்கவேண்டும். எப்படி? இதுவே ஒரு தயிர்சாதம் இந்த கேடுகெட்ட வேலையே செய்திருந்தால், நீங்களும் திராவிட எடுபிடிகளும், அல்லக்கைகளும், என்னா பொங்கு பொங்கி இருப்பீங்க. இப்போ எங்க எல்லாரும் ஓடி ஒளிஜிக்கிட்டீங்க ?? இதுதான் உங்கள் சமூக நீதியின் லட்சணமான்னு, வெளியே வாங்க எல்லாரும்னு, கிழிச்சி தோரணம் கட்டணும் சார். ஐயோ மன்னிக்கணும், தெரியாம சார் சொல்லிட்டேன்.


ponssasi
டிச 30, 2024 11:53

என்னது மாணவிக்கு ஆதரவாக திருமா போராடுவாரா? நாங்க அடுத்து 25 சீட், துணை முதல்வர் எங்களது இளவல்கள் முக்கிய துறை அமைச்சராக வரப்போகிறார்கள், நாங்கள் ஒரு பெண்ணுக்கு போராடுவதா Never. தொங்கு சட்டமன்றம் அமைந்தால் உதிரிகளை வைத்து மோடி காலில் வீழ்த்தாவது முதல்வராக அமர்வதுதான் எங்கள் இலக்கு. முடிஞ்சா நீ என்னை பண்ணு , போலாம் ரைட் வண்டிய நேரா அறிவாலத்துக்கு உடு


vijai
டிச 30, 2024 11:35

முருகன் சார் திருமாவளவன் போராட்டம் நடத்தினால் இருக்கிற பிளாஸ்டிக் சேரும் போயிடும் ?


sankaranarayanan
டிச 30, 2024 11:30

மாட்டோம் மாட்டோம் நாங்கள் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளுக்குத்தான் போராடுவோம் நாங்கள் உட்கார நாற்காலிதான் முக்கியம்


Ramalingam Shanmugam
டிச 30, 2024 11:25

சரக்கு இருக்கு ...மிடுக்கு இருக்கு என்று சொன்ன குருமா


Sidharth
டிச 30, 2024 11:06

ஐயோ இவரா ? கோர்ட்டில் திமுகவிடம் முரசொலி மூல பத்திர விவகாரத்தில் "வருத்தம்" தெரிவித்தவர் ஆயிற்றே இந்த விசாகா கமிட்டி வீரர்


NaamIndian
டிச 30, 2024 10:52

யாரு அந்த ROLEX Sir?


R.MURALIKRISHNAN
டிச 30, 2024 10:49

பணப் பொட்டி குடுத்து பாருங்க, திருமா முதல் ஆளாக வந்து நிற்பார்.


xyzabc
டிச 30, 2024 10:47

முருகன் சார், சரியான கேள்வி. பின்னர் வெட்டி பேச்சு யார் பேசுவார்கள்?


முக்கிய வீடியோ