உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ. 34 லட்சம் இழந்த பெண்

போலி ஆன்லைன் டிரேடிங்கில் ரூ. 34 லட்சம் இழந்த பெண்

கோவை: கோவை, இடையர்பாளையம், குமரன் நகரை சேர்ந்தவர் மோனிசா, 32. இவர் இணையத்தில் பங்கு சந்தை குறித்து பார்த்துள்ளார். டிரேடிங் செய்வது குறித்தும், இணையத்தில் தேடி வந்தார். இந்நிலையில், இவரது 'வாட்ஸ் ஆப்' எண்ணை, 'ரேட்பின் ஸ்டடி குரூப் அண்ட் கோட்' என்ற வாட்ஸ் ஆப் குழுவில், அடையாளம் தெரியாத நபர்கள் இணைத்துள்ளனர். இதனையடுத்து, மோனிசாவின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, போலி பங்கு சந்தை செயலியை அனுப்பினர். அதன் மூலம், முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, விற்பது, ஐ.பி.ஓ., உள்ளிட்டவை குறித்து, வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்து வந்துள்ளனர். மோனிசாவையும் முதலீடு செய்யும் படி கேட்டனர்.இதை நம்பி, மோனிசா மோசடி நபர் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, ரூ. 34.48 லட்சம் அனுப்பினார். அந்த பணம், மோசடி நபர்கள் அளித்த செயலியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, மோனிசா வர்த்தகம் செய்துள்ளார். அதில் வரும் லாப பணமும் செயலியில் காட்டியுள்ளது. ஒரு கட்டத்தில், ரூ.50 லட்சத்துக்கு மேல் செயலியில் இருப்பு இருந்துள்ளது.அந்த பணத்தை எடுக்க, மோனிசா முயற்சித்தார். அப்போது அவர்கள், மேலும் பணம் கொடுத்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என கூறினர். அப்போது தான் மோனிசாவுக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Saroja Sri
ஜன 15, 2025 19:59

The Banks also play an important role in these cases. Banks fraud/mule accounts and continue to operate and protect them. In one single case there are minimum 5 fraud accounts in each of the following Banks: AUSF SBI ICICI AXIS CENTRAL BANK CANARA CITY UNION FEDERAL UNION BANK INDIAN BANK RMGB and around TEN FRAUD ACCOUNTS IN HDFC BANDHAN PUNJAB NATIONAL BANK INDUS IND. In fact None of the Banks owns responsibility for such fraud accounts. Emails are forwarded and finally come up with zero resolution, even if they are complained. These accounts are NOT REPORTED TO THE CONTROLLING AUTHORITIES WITHIN 15 days. The frozen accounts get unfreezed and again continue to be used as fraud/mule accounts. Punjab National Bank vouches for the credibility of its account holders EVEN IF THERE IS A MISMATCH IN THE NAME OF THE ACCOUNT HILDER AND EVEN IF THE MONEY IS WITHDRAWN WITH A FRAUDULENT INTENSION. The policemen in the cyber Cell are few when compared to the endless cyber fraudsters. There are also FAKE CUSTOMER CARE NUMBERS FOR BANKS AND FAKE CLASSES TO TRAIN THE FRAUDSTERS. mostly in Rajasthan, Gujarat, MP, UP, Bihar, West Bengal. it is a Herculean task for the cyber police to nab them. At this rate, public will lose faith in the Banking tem and look for other options like Post Office. Crores of hard earned money is being lost and it is increasing. New laws must be made to address this.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2025 12:15

திராவிடம் என்பதே நிலப்பகுதியாக இருக்கையில் தமிழனை நாம் அனைவரும் திராவிடர்கள் என்று கூறி மூளைச்சலவை செய்த மோசடிக்காரர்களும் இப்படிப்பட்டவர்கள்தான்.. சொல்லப்போனால் மோசடி ட்ரேடிங் நபர்களை விட ஆபத்தானவர்கள் .... ராஜா சொன்னதில் தவறில்லை .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2025 12:12

பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் கூட முயற்சி எடுத்து சுலபமாகக் கற்கலாம் ... யாருடைய உதவியின்றி நான்கைந்து மாதங்கள் சுயமாக, கடுமையாக உழைக்க வேண்டும் .....


Oru Indiyan
ஜன 15, 2025 11:18

பேராசை பெரு நஷ்டம்...


Senthil Kumar P
ஜன 15, 2025 10:30

ராஜாவின் புத்தி அவ்வளவு தான், நீங்க டென்சன் ஆகாதீங்க


Kasimani Baskaran
ஜன 15, 2025 07:48

வில்லாதி வில்லர்கள் பலர் இருக்கிறார்கள். கோடிகளை அடையாளம் தெரியாமல் அள்ளுவதில் நிபுணர்கள் அவர்கள்.


Senthoora
ஜன 15, 2025 07:39

ராஜா, எதுக்கெடுத்தாலும் திருட்டு திராவிடமா? உங்க வீட்டில் உலை வேகாவிட்டாலும், அவர்கள் காரணமா? இந்த ஒன்லைன் டிரேடிங் செய்ய ஒரு நல்ல அறிவு, பகுத்தறிவு தேவை. அது திராவிடனுக்கு மட்டுமல்ல இந்தியால எந்த கட்சியிலும் டலேண்ட் இல்லை.


VENKATASUBRAMANIAN
ஜன 15, 2025 07:29

மக்கள் திருந்தவே மாட்டார்கள். எவ்வளவோ அனுமதி பெற்ற நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்கின்றன. வங்கிகளும் ஆன்லைன் வர்த்தகம் செய்கின்றன. இதை விட்டு எவனோ தெரியாதவனிடம் ஆசையால் ஏமாற்றுகின்றனர்.


raja
ஜன 15, 2025 04:31

திருட்டு திராவிடர்கள் ஆக இருக்க கூடும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை