உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9 கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.32.50 கோடியில் பணிகள் துவக்கி வைப்பு

9 கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.32.50 கோடியில் பணிகள் துவக்கி வைப்பு

சென்னை: மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒன்பது கோவில்களை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் நாச்சியார் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகியவற்றில், 124 கோடி ரூபாய் மதிப்பில் 17 பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் கோவில், 2.81 கோடி; விருதுநகர் கல்விமடை திருநாகேஸ்வரமுடையார் கோவில், 2.10 கோடி, திருவண்ணாமலை புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் கோவில், 1.56 கோடி. கிருஷ்ணகிரி அத்திமுகம் ஜராவதீஸ்வரர் கோவில், 1.31 கோடி; மதுரை, சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில், 1.52 கோடி ரூபாய் உட்பட மொத்தம் ஒன்பது கோவில்களை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள், 32.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், சென்னை மாதவரம் கைலாசநாதர் கோவில். கோவை, ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உட்பட 14 கோவில்களில், 51.1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம், ஹிந்து அறநிலையத்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

644 பேருக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணை யம் வாயிலாக, மக்கள் நல்வாழ்வு துறைக்கு, 182 உதவி மருத்துவ அலுவலர்கள், 48 பல் டாக்டர்கள், 324 அறுவை அரங்கு உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 உளவியல் உதவி பேராசிரியர்கள், 17 மருந்து ஆய்வாளர்கள், 54 வட்டார சுகாதார புள்ளி யிலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு, 644 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மருத்துவ ஊரக பணிகள் இயக்ககம் உள்ளிட்ட மருத்துவ துறை சார்ந்த பிரிவுகளுக்கான பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர், உதவி சேமிப்பு கிடங்கு மேலாளர்கள், பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, கணேசன், தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலி நாங்குநேரி, திருச்சி தாத்தையங்கார்பேட்டையில், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரை கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அரியலுார் உட்கோட்டை, தர்மபுரி மாதேங்கலம், வேலுார் வளத்துார், கடலுார் அன்னவல்லி ஆகிய இடங்களில், புதிய நுாலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், 11 மாவட்டங்களில், 49 பொது விநியோக கடைகள் கட்டப்பட்டு உ ள்ளன. இவ்வாறு 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி துறையால் கட்டப்பட்ட கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் பெரியசாமி, காந்தி, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஆக 23, 2025 08:02

புனரமைப்புப் பணி துவக்க இவரை ஏன் அழைப்பதில்லை?.


Jalra Babu
ஆக 23, 2025 06:34

The Eastern side temple tower at Srirangam was damaged about 4 years ago and it has not been restored till date. This is called Dravida Model admiration. Really a sorry state of affair.


G Mahalingam
ஆக 23, 2025 05:27

உண்டியல் பணத்தில் இப்படி கொள்ளை அடிக்க வழி. பக்தியே இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தில் தலையிட உரிமை இல்லை. அறம் நிலை துறையே ஒரு கொள்ளை அடிக்கும் துறை


Kasimani Baskaran
ஆக 23, 2025 04:59

திராவிட ஆட்சியாளர்களால் பல கோவில்கள் சிற்பங்கள் சான்ட் ப்ளாஸ்டிங் மூலம் நாசம் செய்யப்பட்டுள்ளது. அது போல ஆகாமல் இருக்கவேண்டும் என்றால் தொல்லியல் துறையை வைத்து இது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


Mani . V
ஆக 23, 2025 04:44

ரூ.32.50 ஸ்வாகா.


ram
ஆக 23, 2025 04:16

நிதி எல்லாம் தாராளமா ஒதுக்குவாங்க .. ஆனா வேலை நடக்குமா... நடக்காது.. பணம் முழுதும் கஜானாவுக்கே போயிடும் ...எந்த கஜானா.. அரசு கஜானாலே இருந்து சொந்த கஜானாக்கு மாரிடும்.. இதுவே எங்களோட திட்டம்.


M Ramachandran
ஆக 23, 2025 02:51

ஆரம்பிச்சுட்டரைய்யா ஆரம்பிச்சி தேர்தல் ஸ்டாண்ட். கோயில்ல அட்டைய்ய போடமா யிருந்தாலேயே உங் களுக்கு புண்ணியமா போவுது. கோயில் சொத்தை கோயிலுக்கு குத்தகையாக வர வேலாண்டிய நெல் வாடகைய்ய வகையாறாக்களாய் யை ஆட்டையை போடுவதில் உங்கைகளாக சிறுவட்டம் வட்டத்துக்குள் துப்பாக்கி சண்டையை வரை போட்டுக்குகாரங்க ஊடக செய்திகளைபார்பதில்லையா? அதை தடுக்க முயற்சி செய்யுங்க்க. வேர ஸ்டுன்ட் எல்லாம் இப்பொ வேனாம்.


Priyan Vadanad
ஆக 23, 2025 02:23

திராவிடியல் அரசு எப்படி இந்து கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கலாம்? அபச்சாரம் அபச்சாரம். அதுவும் 32.50 கோடியியில்?


சமீபத்திய செய்தி