மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பலவான்குடி கட்டட தொழிலாளி அய்யாக்கண்ணு, 65. இவர் தன் வீட்டிற்கு அருகே உள்ள கண்மாயில் மீன் பிடிக்க தண்ணீர் வெளியேறும் பாதையில் மீன்கள் சிக்கும் விதமாக, 'பத்த கட்டை' அமைத்திருந்தார். நேற்று அதிகாலை மீன்கள் சிக்கியுள்ளதா என பார்ப்பதற்காக கண்மாய்க்கு சென்றார்நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு அருகில் மின்கம்பத்தில் இருந்து மின்ஒயர் அறுந்து விழுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் சென்ற அய்யாக்கண்ணு மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். குன்றக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.