உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையை அழகுபடுத்துங்கள்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

சென்னையை அழகுபடுத்துங்கள்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு வரும் 7, 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் வர உள்ளதால், மாநகரை அழகுபடுத்தும் பணி நடக்கிறது.அந்த வகையில், சென்னை விமான நிலையம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்லும் வழி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை துாய்மையாகவும், அதேநேரம் வண்ணங்கள் பூசி அழகாகவும் மாற்ற மாநகராட்சி உத்தரவிட்டுஉள்ளது.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மழையால் சாலையோரங்களில் உள்ள சுவர்கள், மைய பகுதிகள் கறுப்பு வண்ணத்தில் உள்ளன. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை, முழுதும் அழகுப்படுத்த அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சேவை துறை மேற்கொள்ளும் பணிகள் முடிய தாமதமானாலும், அச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Krishnamurthy Venkatesan
ஜன 05, 2024 17:59

சாலைகளின் தரம், மழை/வெள்ள நீர் தேங்காதது, சாலை விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், சிவாஜி மஹாராஜின் கோட்டை போன்ற வடிவமைப்புகள், மேம்பாலங்கள் (ஒரு போஸ்டர் கூட இல்லை).....மின்சார பேருந்துகள் என உலக தரம் வாய்ந்த வசதிகள் உள்ள மும்பை நகர் போன்று சென்னையில் வரவேண்டும். அதற்கு தமிழக அதிகாரிகள் ஜப்பான், சிங்கப்பூர் செல்லாமல் மும்பை சென்று பார்த்து, அதிகாரிகளுடன்/அமைச்சர்களுடன் கலந்து பேசி சென்னையிலும் அத்தகைய திட்டங்களை கொண்டு வரவேண்டும்.


Narayanan
ஜன 05, 2024 16:04

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிவிட்டால் அழகு வந்துவிடுமா ??


Sathyam
ஜன 05, 2024 11:18

சென்னை மாநகரம் இல்லை சென்னை மாநரகம்


R. Vidya Sagar
ஜன 05, 2024 11:08

என்ன நடக்கிறது? உத்தரவு போடுவது முதல்வரின் ஏகபோக உரிமை அல்லவா?


nusrathbegum
ஜன 05, 2024 11:08

அழகு படுத்தல் அப்புறம் அடுத்த மழைக்காலத்திற்குள் எந்தெந்த இடங்களில் வெள்ள நீர் புகுகிறதோ அவற்றை கண்டறிந்து பொபது பொறியாளர்களின் ஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Sathyam
ஜன 05, 2024 10:53

இந்தியாவில் இருக்கற பணக்காரர்கள் பட்டியல் சென்னை ஒண்படாது பட்டதாம் இடம் தான் எது ரெண்டோ மூணு பகுதி ஏரியா தான் சொல்லற மாறி இருக்கு மத்தபடி இன்னும் ஒரு சேரி கிராமமே மாதிரி தான் இருக்கு ஒரு அழகான ரசனை இருக்கு கட்டட காலை இல்லை செழிப்பு இல்லை பணக்காரத்தன்மை இல்லை சொல்லற மாதிரி செல்வம் இல்லை , பெங்களூரு ஹைட்ரபாத் எல்லாம் ரொம்ப முன்னேறியாச்சு ஒரு அருமையான விமான நிலையம் மெட்ரோ வசதி ஆனா சென்னை இன்னமும் அப்டியே தான் இருக்கு , அதுவும் கொஞ்சம் மழை வெள்ளம் வந்தால் கதை கந்தல் ஆகி நாறி தான் போகுது , இதுக்கு ஒரே வழி தமிழ்நாடு மட ஜனம் பேசாமே சென்னை விட்டு வெளியேறி வேற ஊரு தமிழ்நாட்டுலே போயி குடியேறி ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை சுத்தமான காற்று குடிநீர் வசதியுடன் வாழலாம் , தமிழ்நாட்டுலே ஏவலுவோ சின்ன ஊரு பட்டினம் நல்லாவே வளர பெறுக வாய்ப்பு இருக்கு , அதை விட்டு சென்னைலே குடியேறினர் வாழ்க்கை சீரழிஞ்சு சர்வநாசம் தான்


Vivekanandan Mahalingam
ஜன 05, 2024 09:31

எங்கு பார்த்தாலும் குப்பை , சாக்கடை , இதுக்கும் மேலே மாநகராட்சியை கொட்டும் குப்பை , மோசமான சாலைகள் , நடை பாதை தொலைந்து பல வருடங்கள் ஆகிறது - வெட்கம் மானம் இல்லாத ஆட்சி - மாநகராட்சி - மேயர் கொஞ்ச நாட்களாக காணும் , ஸ்பெயின் போயாகித்து இப்போ வாடிகன் போய்ட்டாங்களா மக்கள் வரி பணத்துல


Sathyam
ஜன 05, 2024 10:44

ஜன்மத்துலே இந்த ரெண்டு சனியன் நாத்தம் பிடிச்ச த்ரவிஷ ட்ராவடியா மாடல் ஆட்சி இருக்கும் வரை சென்னைக்கு விமோச்சனம் இல்லை இந்தியாவில் மத்த நகரங்கள் எவ்ளவோ மேல் நல்லாவே சுத்தமா இருக்கு ஒரு பெரு இருக்கு. ஆனா சென்னை பத்தி ஒரு நல்ல அபிப்ராயமே இல்லை வெளில மரியாதை தெரியாத ஜனம் ஏமாத்தற மோசடி பேர்வழிகள் மகா கேவலமான சட்டம் ஒழுங்கு நீ நிலை அஆதரம் நிர்வாகம் படுமோசம் , இன்னும் சொல்ல போன சிங்கப்பூர் மலேஷியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் கூட சென்னை பெற கேட்ட முகம் திரும்பிக்கறாங்க , அவுங்களுக்கு தமிழ்நாட்டு வரணும்னா கோவில் சில சுற்றுலா இடம் தான் சென்னை சுத்தமா பிடிக்கல அது தான் எதார்த்தம் உண்மை ஆனா இந்த அடாவடி சென்னைவாசிகள் தற்பெருமை தம்பட்டம் தான் ஜாஸ்தி தன்னையும் தான் ஊரைப்பத்தி எந்த மாறுதலையும் செய்ய முயற்சி எண்ணமே இல்லை


நாஞ்சில் நாடோடி
ஜன 05, 2024 08:49

மேயர் பற்றிய செய்தி இல்லை...


கருத்து சுந்தரம்
ஜன 05, 2024 08:26

???????? Bus-க்கு lipstick போட்டாச்சு....அடுத்து செவுத்தக்கும் platform-க்குமா?


Sampath
ஜன 05, 2024 07:51

We dont want to do anything. We just want to do cleaning. Please give us 200 rs and one quarter. We will clean up everything. We will clean up BJP also. We have no sense other then sense for money.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ