உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் மனுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம்; போலீசில் புகார் அளித்தார் தாசில்தார்

உங்களுடன் ஸ்டாலின் மனுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம்; போலீசில் புகார் அளித்தார் தாசில்தார்

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வீசப்பட்டிருந்த விவகாரத்தில், மர்ம நபர்கள் ஆபீசில் புகுந்து திருடிச் சென்று, வைகை ஆற்றில் வீசியுள்ளதாக தாசில்தார், போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், தாசில்தார் அலுவலகத்தின் பாதுகாப்பு அவ்வளவு மோசமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் முழுதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில், 185 இடங்களில் முகாம் நடத்த, 40.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். ஒரு முகாமிற்கு எழுது பொருள், பேப்பர்கள் உள்ளிட்டவைகள் வாங்க, முகாமிற்கான செலவு தொகையாக, 30,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் தி.புதுார், பூவந்தி, மடப்புரம், பொட்டப்பாளையம், பழையனுார் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வைகை ஆற்று நீரில், முகாமில் மக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன. அவை ஜெராக்ஸ் பேப்பர்கள் என, கலெக்டர் பொற்கொடி பதிலளித்திருந்தார். ஆனால், ஆக., 22, 23 ஆகிய தேதிகளில் இப்பகுதியில் நடத்தப்பட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் என்பது உறுதியானது. இதையடுத்து, திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் போலீசில் அளித்த புகாரில், தாலுகா அலுவலகத்தில் இருந்த மனுக்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று வைகை ஆற்றில் வீசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார். திருப்புவனம் தாசில்தார் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. அதே சமயம், அலுவலகத்தில் புகுந்து கட்டுக்கட்டாக மனுக்களை திருடிச்செல்லும் அளவிற்கு அலுவலகம் பாதுகாப்பின்றி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வேண்டுமென்றே சிலர் திருடிச்சென்று ஆற்றில் வீசியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். சில நாட்களில் தாசில்தாரால் தண்டிக்கப்பட்டவர்கள், அலுவலகத்தில் தகராறு செய்தவர்கள், அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் என, பல கோணங்களில் திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், இதுபோன்று எத்தனை மனுக்கள் 'காணாமல்' போயுள்ளன என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தாசில்தார் உட்பட 7 பேர் மீது

ஒழுங்கு நடவடிக்கை

இந்த சம்பவத்தை அடுத்து தாசில்தார் விஜயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விளக்கம் கேட்டு சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சர்வே பிரிவில் உள்ள 2 வரைவாளர்களுக்கு (17 ஏ) குற்றக்குறிப்பாணை அளித்தனர். மேலும் தலைமை சர்வேயர், 3 சர்வேயர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. அங்கு கிடைத்த 13 மனுக்களில் 6 மனுக்கள் முகாமில் வழங்கிய மனுக்கள். மற்றவை ஏற்கனவே இணைய தளத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டவை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

R.RAMACHANDRAN
செப் 01, 2025 07:26

இந்த நாட்டில் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என இறுமாந்துள்ள அரசு ஊழியர்களிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது.இவர்களை கூண்டோடு வீட்டிற்கு அனுப்பினால் தவிர எதிர் காலத்திலும் நேர்மையாக கடமையை செய்யமாட்டார்கள்.


V Venkatachalam
ஆக 31, 2025 21:55

சவாலே சமாளி. சட்டு புட்டுன்னு சமாளி.


Gopalan
ஆக 31, 2025 17:38

மிகவும் கேவலம். மக்களின் மனதை புண்படுத்த இதை விட கேவலமான திருட்டு திமுக சரித்திரத்தில் இல்லை. மொபைல் எண்களும் சேர்த்து திருடப்பட்டதால் சைபர் கிரைம் அதிகரிக்க வழி வகிக்கும். உங்களுடன் ஸ்டாலின் திட்டங்கள் திருடப்பட்டதாக என்று மக்கள் நினைப்பார்களோ?


அன்பு
செப் 01, 2025 02:36

மனுக்கள் பரிசீலித்த பிறகு தேவை இல்லை என்று வீசினோம் என்று இன்னொரு காரணம் சொன்னார்களே.


ponssasi
ஆக 31, 2025 15:26

திருடு போன மனுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் தாசித்தார் ஐயாவுக்கு மனுக்கள் காணாமல் போனது தெரிய வருகிறது. அதன் பிறகுதான் புகார் அளிக்கிறார். வாங்கிய மனுக்கள் இருக்கா இல்லையானு கூட தெரியல இது 45 நாட்கள்ல தீர்வுனு முதல்வர் சொல்லுறார். இப்படிப்பட்ட அதிகாரிகளை வைத்துக்கொண்டு எந்த அரசாக இருந்தாலும் அது மோசமான அரசாகத்தானிருக்கும்


M Ramachandran
ஆக 31, 2025 12:47

இவ்வளவு மட்டமான ஆட்சியை அலங்கோலத்தை தமிழ் நாட்டு மக்கள் இதுவரை கண்டவர்கள் உண்டா?


M Ramachandran
ஆக 31, 2025 12:38

பொய் புனை சுருட்டு திருட்டு பித்தலாட்டம் இன்னும் என்ன லாமொ கூறலாம்


M Ramachandran
ஆக 31, 2025 12:36

ஆட தெரியாதவர்களுக்கு முற்றம் கோணல்னாளாம் ஒருத்தி. பீலா விடுவதில் அதில் தான் மன்னன்கள்


Venugopal S
ஆக 31, 2025 12:34

இதுபோன்ற சில்மிஷங்கள் செய்யக் கூடியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இருப்பதால் இதற்கான சாத்தியங்கள் உள்ளன!


Perumal Pillai
ஆக 31, 2025 12:29

In 1989, during a visit to Tirunelveli District, karunanidhi and his family stayed at the India Cements guest house, while durai murugan collected grievance petitions from the public on karunanidhi's behalf. The next morning, the collected petitions were found discarded in the company's dustbin. This is an age old practice.


sankar
ஆக 31, 2025 12:17

கேப்பையில் நெய் வடியுது சார்


புதிய வீடியோ