உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புத்தகம் எழுதலாம்; விமர்சிக்க கூடாது: அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு

புத்தகம் எழுதலாம்; விமர்சிக்க கூடாது: அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு

சென்னை : 'அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று, புத்தகம் எழுதலாம்; அதில், அரசை விமர்சிக்க கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவை பின்பற்றி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வி சார்ந்த அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டை முன்னிட்டு, அரசு ஊழியர்களின் எழுதும் திறனை அரசு அங்கீகரிக்கிறது. எழுதும் திறமையுள்ளோர் இலக்கியம், சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை, அரசின் கொள்கைகள், துறை சார்ந்த விளக்கங்கள் அடங்கிய நுால்களை எழுதும் முன், அரசின் அனுமதியை பெற வேண்டும். அதேபோல, அரசின் மீதான விமர்சனமோ, எதிரான கருத்துக்களோ, தாக்குதலோ இடம் பெறாது; மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் இடம் பெறாது என்ற நிபந்தனையுடன் கூடிய முன் அனுமதி பெறாமல், கலைப்பணிகளில் ஈடுபடவோ, புத்தகத்தை வெளியிடவோ கூடாது. அத்துடன், முன் அனுமதி பெறாமல், வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியமோ, காப்புரிமை தொகையோ பெறக்கூடாது. புத்தகத்தை விற்பனை செய்வதற்கோ, ஊக்குவிப்பதற்கோ தன் நேரத்தையும், அரசாங்க செல்வாக்கையும் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Murthy
ஏப் 11, 2025 12:16

ஜால்றா அடித்தால் பதவி உயர்வு கொடுக்கப்படும். பஞ்சபடிக்கும் அகவிலைப்படிக்கும் ஓட்டை விற்கும் கூட்டம் .


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 11, 2025 10:47

புத்தகங்களைப் படிக்கலாம் ஆனால் அட்டையை தொடக்கூடாது, புரட்டக்கூடாது. எப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சு ஆர்டர் போடறாங்கப்பா


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 11, 2025 10:45

எனக்கு ஒரு டவூட்டுன்னு தனபாலு அண்ணாச்சி சொல்லுதாக, அப்பா ஆச்சி மாதிரி அகில உலக கென்டக்கியிலும் ஆட்சி கிடையாதுன்னு கூட விமரிசனம் செய்யக்கூடாதுங்களா?


C G MAGESH
ஏப் 11, 2025 10:04

விடியலை பாராட்டி மட்டும் எழுத அனுமதி உண்டு


Keshavan.J
ஏப் 11, 2025 09:10

அரசு ஊழியர்கள் தினமும் சாப்பிடலாம் ஆனால் ...


nv
ஏப் 11, 2025 07:45

இப்போது எங்கே உங்கள் பேச்சுரிமை? அடுத்தவர்களை நீங்க விமர்சிக்கலாம் ஆனால் உங்களை ஒருத்தன் விமர்சிக்க கூடாது? திருட்டு திராவிட மாடல் அவலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை