உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தனியார் பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

விழுப்புரம்: தனியார் பஸ் டிரைவரை தாக்கிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், மடுகரையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 43; தனியார் பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் கடலுாரில் இருந்து வி ழுப்புரம் மார்க்கமாக பஸ்சை ஓட்டி வந்தார். மடுகரையில் வந்தபோது, ராம்பாக்கத்தை சேர்ந்த உதயகுமார், 33; சூரியபிரியன், 27; ஆகியோர் தங்கள் மொபட்டில் திடீரென சாலையை குறுக்கிட்டதால் சுந்தர்ராஜன் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உதயகுமார், சூரியபிரியன் ஆகியோர் சுந்தர்ராஜன் பஸ்சை ஓட்டிச்சென்றபோது, கொங்கம்பட்டில் வழிமறித்து அவரை திட்டி தாக்கினர். வளவனுார் போலீசார், உதயகுமார், சூரியபிரியன் மீது வழக்குப் பதிந்து உதயகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி