தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
சென்னை: சென்னை அம்பத்தூரில் தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.சென்னை டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவரை, அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் சராமரியாக வெட்டிக் கொலை செய்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.கடந்த 26 ம் தேதி மாலை சென்னை அண்ணா நகரில், ராபர்ட் என்ற ரவுடியை கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.