உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை: நெல்லையில் அதிர்ச்சி

காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை: நெல்லையில் அதிர்ச்சி

திருநெல்வேலி: நெல்லை கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி., நகரில் இன்று காலை வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், கொல்லப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார்(28) என்பது தெரியவந்துள்ளது. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், இந்த விவகாரத்தில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் கவின்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 27, 2025 20:18

நெல்லை என்றாலே கொலை, கொள்ளைதான். இந்த அவலநிலைமை இன்று, நேற்றல்ல, பல வருடங்களாக உள்ளது. அங்கு ஒவ்வொருவர் வீட்டிலும் சாப்பாட்டுக்கு அரிசி, பருப்பு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் வீட்டில் உள்ள வொவொருவனுக்கும் ஒரு வீச்சருவா இருக்கும். நெல்லையில் பணிபுரிய காவல்துறையினரே பயப்படுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை