மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலை; சவரனுக்கு ரூ.560 உயர்வு
16 minutes ago
ஆராய்ச்சியாளர்களுக்கு மகளிர் ஆணையம் உதவித்தொகை
35 minutes ago
வாக்காளர் பெயர் சேர்ப்பு இன்று, நாளை சிறப்பு முகாம்
40 minutes ago
புவனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான வி.கே.பாண்டியன் மீது ஒரு நபர் தக்காளி வீசினார். இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும் வி.கார்த்திகேய பாண்டியன். இவர், 2000ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார். அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்தது. விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து உடைய பதவி வழங்கப்பட்டது.அம்மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமான வி.கே.பாண்டியன், கஞ்சம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் மீது ஒரு இளைஞர் ஒருவர் தக்காளியை வீசியுள்ளார். இதனால் கொதித்தெழுந்த மற்ற இளைஞர்கள் தக்காளி வீசிய நபரை தரதரவென இழுத்து சென்று தாக்கினர். நிலைக்குலைந்து கீழே விழுந்த அந்நபரை இளைஞர்கள் தொடர்ந்து தாக்கினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
16 minutes ago
35 minutes ago
40 minutes ago