உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் கேட்டு அடம்பிடித்து தீக்குளித்த இளைஞர் பலி

பைக் கேட்டு அடம்பிடித்து தீக்குளித்த இளைஞர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரவாயல்: மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 42; கட்டட கழிவு தரம் பிரிக்கும் பணி செய்கிறார். இவரது மகன் ஜீவா, 19. இவரும் கூலி வேலை செய்து வந்தார். தனக்கு பைக் வாங்கி தரவேண்டும் என, தந்தையிடம் கேட்டுள்ளார்.ஆனால் பைக் வாங்கி தராததால், ஆத்திரமடைந்த ஜீவா இரு தினங்களுக்கு முன் முருகன் வேலை செய்யும், மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள ஷெட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து, குடிநீர் பாட்டிலில் பெட்ரோல் பிடித்துள்ளார்.மேலும், 'பைக் வாங்கி தரவில்லை என்றால், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன்' என, தந்தையை மிரட்டி உள்ளார்.இருந்தும் தந்தை கண்டுக்கொள்ளாதால், கையில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு, அருகே குளிர்காய்வதற்காக மூட்டி வைக்கப்பட்டிருந்த தீயின் அருகே சென்று 'தீயில் இறங்கிவிடுவேன்' எனக் கூறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தீ சட்டென்று ஜீவாவின் உடலில் பற்றியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள், ஜீவாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் ஜீவா உயிரிழந்தார். மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

c.mohanraj raj
பிப் 11, 2025 19:47

விபத்தில் இறப்பதற்கு பதிலாக தற்கொலை செய்து கொண்டார்.அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்


visu
பிப் 11, 2025 16:45

பள்ளிகளில் என்ன சொல்லி தருகிறார்கள் ? அந்த காலத்தில் நீதிக்கதைகள் என்ற பெயரில் நல்லது கேட்டது சொல்லி தந்தனர் . இப்போ பகுத்தறிவு என்ற பெயரில் எதன்மேலும் நம்பிக்கையில்லாத பெரியோர் புத்திமதி கேட்க்காத சமுதாயத்தை உருவாக்குகின்றனர் அப்புறம் கொலை கொள்ளை குற்ற சம்பவங்கள் தற்கொலை எல்லாம் நடக்கும் இவங்க பகுத்தறிவு கிழித்த கிழிப்புக்கு கும்பமேளாவில் 42 கோடி பேர் நீராடியுள்ளனர்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 11, 2025 14:56

மொபைல் கேட்டு வாங்கிக்கொடுக்காததால் தற்கொலை செய்த மாணவ, மாணவிகளும் உண்டு .... போனா போகுதுங்க ...... இதுங்க இருந்தும் ஒண்ணும் சாதிக்கப்போறதில்ல .....


Pandi Muni
பிப் 11, 2025 14:10

கஞ்சா காடாகிப்போன தமிழ்நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா


A.Gomathinayagam
பிப் 11, 2025 13:51

குடும்ப சூழ்நிலை தெரியாமல் வளரும் பிள்ளைகள்


venugopal s
பிப் 11, 2025 13:14

பாவம் இப்படி உயிரை விட்டு விட்டாரே


Jai Sankar Natarajan
பிப் 11, 2025 12:20

பூமிக்கு பாரம் குறைந்தது


VENKATASUBRAMANIAN
பிப் 11, 2025 07:51

இப்போதெல்லாம் பள்ளிகளில் எதுவுமே சொல்லி தருவதில்லை. முன்பெல்லாம் மோரல் சயின்ஸ் என்று ஒரு பீரியட் இருக்கும். இப்போது பிடி பீரியட் டே இருப்பதில்லை. இதுதான் திராவிட மாடல். அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து முன்னேறுகிறார்கள். அரசு பள்ளிகளில் போதைக்கு அடிமையாகிறார்கள். திமுகவுக்கு பணம் சம்பாதிப்பது ஒன்றே குறி. எவன் செத்தாலும் கவலை இல்லை. பணத்தை கொடுத்து அமுக்கி விடுவார்கள். கள்ளச்சாராய கேஸில் என்ன நடந்தது.


Smbs
பிப் 11, 2025 07:34

உத்தம மாண செயல்


Kasimani Baskaran
பிப் 11, 2025 07:15

பள்ளியில் என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை - போன்றவை இப்பொழுதெல்லாம் சொல்லிக்கொடுப்பது கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை