மேலும் செய்திகள்
தொழிலாளி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்
01-Oct-2024
விழுப்புரம்: கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ராம்தேவ், 26; கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் சுதாகர், 27; ரவிவர்மன், 26; ஆறுமுகம், 28; செந்தில், 42; ஜெயக்குமார், 26; அய்யப்பன், 32; தங்கராசு, 45; ஏகாம்பரம், 37; நண்பர்கள்.இவர்கள் அனைவரும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி அப்பகுதியில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் ராம்தேவ் அடித்து கொலை செய்யப்பட்டார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து, சுதாகர் உட்பட 8 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது ஆறுமுகம் உடல் நலக்குறைவால் இறந்தார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட சுதாகருக்கு, ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ரவிவர்மன், செந்தில், ஜெயக்குமார், அய்யப்பன், தங்கராசு, ஏகாம்பரம் ஆகிய 6 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
01-Oct-2024