உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூர் போல இந்திய நகரங்கள்; உருவாக்க பிரதமர் மோடி விருப்பம்

சிங்கப்பூர் போல இந்திய நகரங்கள்; உருவாக்க பிரதமர் மோடி விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் செமிகண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், கிளஸ்டர் மேம்பாடு, குறைக்கடத்தி வடிவமைப்பு உள்ளிட்ட துறை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் 5வது முறையாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் முன்னிலையில் செமிகண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், கிளஸ்டர் மேம்பாடு, குறைக்கடத்தி வடிவமைப்பு உள்ளிட்ட 4 துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஒரு காலத்தில் அமெரிக்காவில் மட்டும் இருந்த செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் இன்று உலகம் முழுவதும் உற்பத்தி மையத்தை அமைத்து வருகிறது.

வேகமாக வளரும்

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்கப்பூர் பிரதமர் உடனான உயர்மட்ட குழு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்.இதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படுகிறது. உலகில் வளரும் அனைத்து நாடுகளுக்கும் சிங்கப்பூர் உத்வேகம் அளிக்கிறது. சிங்கப்பூர் இன்னும் வேகமாக வளரும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
செப் 05, 2024 22:00

சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உழைப்பு. இந்தியாவில் தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே இது இங்கு சாத்தியம் ஆகும்!


spr
செப் 05, 2024 20:07

இது போல பல அறிவிப்புக்களைக் கேட்டுப் பல ஆயிரம் கோடிகளை இழந்தவர்கள். எங்கள் கூவத்தில் கப்பல் ஒட்டிவிட்டோம் இப்படி எங்கள் கலைஞர் செய்யாத அறிவிப்பா?இது வரை எத்தனை முறை இந்த வாசகங்களை நாங்கள் கேட்டு விட்டோம் ஆனாலும் மோடி இப்படி அப்பட்டமாக திமுகவைக் காப்பியடிக்கக் கூடாது


Easwar Kamal
செப் 05, 2024 16:59

பிரிதமரே சிங்கப்பூரில் தமிழ் padahihal உள்ள முக்கிய இடங்களாகிய ஏர்போர்ட் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இருந்து அகற்றி ஹிந்தி மொழியில் வைக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அந்த kottangal எல்லாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் இந்த தமிழ் உங்கள் ஹிந்தி மொழி வருவத்துக்கு முன் தோன்றிய மொழி இதை சிங்கப்பூர் ஆளுநர் சொல்லி இருக்கிறார். இதை மோடியும் உரக்க அந்த kooathuku சொல்ல vendum.


kulandai kannan
செப் 05, 2024 14:19

அதற்கு முதலில் மக்களுக்கு தூய்மை பற்றிய அக்கறை வரவேண்டும்.


kumaresan
செப் 05, 2024 12:57

சிங்கப்பூர்கள் வேண்டாம் . ஸ்வீடினை எடுத்துக்காட்டக கொள்ளுங்கள் . இயற்கையும் தூய்மையும் ஒருசேர நாட்டில் குடிகொண்டால் மற்ற எல்லா வளமும் தானாக வந்துவிடும் .


KRISHNAN R
செப் 05, 2024 12:19

ஆஹா ஆஹா...நம்பலாமா......


Indian
செப் 05, 2024 11:37

அதுக்கு நல்ல மனசும் படிப்பறிவும் வேணும், ??


pmsamy
செப் 05, 2024 11:28

அதுக்கு நல்ல மனசும் படிப்பறிவும் வேணும்


பாமரன்
செப் 05, 2024 10:37

ஐந்தாவது முறை போனாலும் எங்க ஜி அதே ஸ்டேட்மெண்ட் விடுவதை நிச்சயமாக பாராட்டனும்... கூடிய விரைவில் இந்திய நாட்டில் உள்ள எல்லா நகரங்களும் சிங்கப்பூர் என பெயர் மாற்றம் செய்ய நடுராத்திரியில் சிறப்பு பார்லிமென்ட் கூட்டம் கூட்டி அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் மக்களே... போங்க போங்க...


Palanisamy Sekar
செப் 05, 2024 10:26

முடியும் என்று நினைத்தால் முடியாதது என்று எதுவுமே கிடையாது. சமீபத்தில் அடல் சேது என்கிற உலகில் ஆக நீளமான பாலத்தை நிறுவ முடிந்தது என்றால் அது எப்படி சாத்தியப்பட்டது. கடலில் மட்டுமே பதினேழு கிலோமீட்டர் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்தில் பல மணி நேரம் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது. அதனால் பெட்ரோல் செலவு மிச்சமானது இது உலகத்தின் ஆச்சர்யப்படுத்துகின்ற செய்தி. அதனால்தான் பிரதமர் சொல்கின்றார் இந்தியாவில் பல நகரங்களை சிங்கப்பூர் அளவுக்கு மாற்றி காட்டப்போவதாக கூறியுள்ளார். மோடியால் முடியாதது என்று ஒன்றுமில்லை. சாதனை பிரதமர் அவர்.


கனோஜ் ஆங்ரே
செப் 05, 2024 14:58

சேகரா... மொதல்ல, அமெரிக்க ஜனாதிபதி வந்தப்ப, ஏழைகள் வசித்த பகுதியை திரை போட்டு மறைச்ச கும்பல்தானே நீங்க... மொதல்ல, ஏழ்மையையும், ஏழையையும் இந்தியாவில் ஒழிங்க, அப்புறம் சிங்கப்பூர் ஆக்கலாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை