உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப்பை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய மோடி: வீடியோ வைரல்

போப்பை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய மோடி: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பஷானோ: ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, போப் பிரான்சிசை கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ftbtpone&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநாட்டின் இடையே, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக பேசினார்.இதன் தொடர்ச்சியாக மாநாட்டில் பங்கேற்க வந்த வாடிகனின் போப் பிரான்சிசை மோடி சந்தித்தார். வயது முதுமை காரணமாக வீல்சேரில் வந்த போப் பிரான்சிசை கட்டிப்பிடித்து போப்பிடம் தன் அன்பை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி. பின்னர் போப்பிடம் நலம் விசாரித்தார். இதன் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.இதற்கு முன் கடந்த 2021-ம் ஆண்டு ஜி20 மாநாடு இத்தாலியில் நடைபெற்ற போது வாடிகன் சென்ற பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Suresh R
ஜூன் 16, 2024 04:55

Very appropriate behaviour of Modiji needs appreciation.


Mahalingam
ஜூன் 15, 2024 12:02

உள்ளூரில் எம்மதமே சம்மதம்.... வேற்றூரில் எம்மதமும் சம்மதம் பிராண்டட் ஹிபோக்ரட்


saravanan
ஜூன் 15, 2024 09:48

அயோத்தி இராமர் கோயில் பிரதிஷ்டையில் கலந்த கொண்ட பிரதமர் மோடியை மத நிகழ்வுகளில் எப்படி கலந்து கொள்ளலாம் என பகுத்தறிவு மிக்க கேள்வி எழுப்பிய பகலவன்கள் இப்போது ஏன் வாயை திறக்கவில்லை? மதசார்பற்ற நாட்டின் பிரதமர் எப்படி ஒரு மதத்தின் தலைவரான போப்பை சந்திக்கலாம் என யாரும் ஏன் கூக்குரல்கள் எழுப்பவில்லை ஆக எதிர்கட்சிகளின் சிந்தாந்தபடி மதசார்பின்மை என்பது இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து இழிவுபடுத்தி பேசுவதும் ஏசுவதும்.


முருகன்
ஜூன் 15, 2024 06:47

இதில் என்ன புதுமை இருக்கிறது அனைவரும் செய்வது தான்


Venkatesan.v
ஜூன் 15, 2024 01:23

அய்யோ பாவம், போப்பாண்டவர் கதை முடிந்தது


Venkatesan.v
ஜூன் 15, 2024 01:21

உண்மை


RAJ
ஜூன் 15, 2024 01:00

ரொம்ப கனவு காணாத ராசா ... உன் பேரே சரியில்லியே .வழி தவறி வந்திட்டியாப்பா ..


Easwar Kamal
ஜூன் 14, 2024 23:05

என்ன உலக மகா நடிப்புடா சாமி. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்த தமிழர்களை தர குறைவா பேசுறது. எலக்ஷன் வந்துட்டா சிறு பான்மையினராகிய கிறிஸ்துவர் / முஸ்லீம் எல்லாரையும் தாக்கி பேசிட்டு அப்டியே அந்தர் பல்டி அடிச்ரவேண்டியது மற்ற நாட்டுக்கு சென்றார்கள். மக்கள் புரிந்து விட்டது இனி மீண்டும் ஆட்சி அமைப்பது சிரமம்தன


Kumar Kumzi
ஜூன் 15, 2024 00:02

ஏன்டா கூமுட்ட இப்ப யாரோட ஆட்சி நடக்குது


Senthoora
ஜூன் 15, 2024 05:07

ஊருக்குத்தான் உபதேசம் ஈஸ்வரா?


vadivelu
ஜூன் 15, 2024 06:24

யாரது பிரசன்னாவா?


Duruvesan
ஜூன் 14, 2024 22:03

பாஸ் என்ன பண்ணினாலும் இங்க டெபாசிட் தாண்டாது


Kumar Kumzi
ஜூன் 15, 2024 00:06

சீனிசக்கர சித்தப்பூ 40/40 வச்சிட்டு நக்கப்பூ ஹிஹிஹி


Senthoora
ஜூன் 15, 2024 05:06

நாட்டில் குற்றம் செய்தவர்களுக்கு கட்ச்சியில் இடம் கொடுத்து, பாவமன்னிப்பு கொடுத்தவர், இப்போ தனக்கு பாவ மன்னிப்பு கேட்டு போயிருக்கிறார், சரி RSS என்ன சொல்லப்போறாங்க? பாவாடை சாமிகளுக்கு பலமா அல்லது இராமர், பூரிநாதரா?


N Sasikumar Yadhav
ஜூன் 15, 2024 14:22

திராவிட கட்சிகளுக்கே ஓட்டுப்போட்டு உங்க ஜனநாயக கடமை செய்யுங்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ