உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!

பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன.ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், முதலீடு, வேலைவாய்ப்பு பற்றிய விவரம் வருமாறு:* சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 100 பேருக்கு வேலை கிடைக்கும்.* PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். * சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையம் அமைகிறது. ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக அமைக்க applied materials நிறுவனம் திட்டமிட்டுள்ளது.* செம்மஞ்சேரியில் மைக்ரோ சிப் நிறுவனம் ரூ.250 கோடியில் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.* மதுரை எல்காட் வடபழஞ்சியில் ரூ.50 கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை இன்பின்க்ஸ் அமைக்கிறது. * கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமையும் ஆலை மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.* செங்கல்பட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் ஓமியம் நிறுவனத்தின் உற்பத்தி மையம் அமைய உள்ளது. இதனால் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.* geakminds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். * சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை 8 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன.

முதல்வர் சமூகவலைதளப்பதிவு

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '' சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாளிலேயே நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலீடுகள் கிடைத்துள்ளன. இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் முதலீட்டை ஈர்க்கும் வேகம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். சென்னை உள்ளிட்ட இடங்களில் ரூ.900 கோடி மதிப்பில் முதலீடுகள், 4100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து மேலும் அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு ஈர்க்கப்படும். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி பயணத்தை முன்னெடுத்து செல்கிறோம்' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

S.Martin Manoj
செப் 04, 2024 15:39

இங்கு கருத்து போடும் பலருக்கு பின்னால் எரிகிறது போலும் ரொம்ப சூடாக இருக்கிறார்கள்.


ManiK
ஆக 30, 2024 18:22

கையெழுத்து போட்டவங்க எல்லாரும் சண்டபோடாம Lineல நின்னு Chocolate வாங்கிகனும்..Okaya..!!


அமிர்தலிங்கம்
ஆக 30, 2024 15:14

ஏற்கனவே நோக்கியா ஆலையை இழுத்து மூடுனாங்களே. இப்போ புது மாடல் ஆட்டையுடன் திரும்ப வர்ரோம். மக்கள் பளசெல்லாம் மறந்துட்டாங்க.


s.selvaraj
ஆக 30, 2024 14:39

அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலினால் , அமெரிக்காவிலிருந்து எந்தவிதமான முதலீட்டு வாய்ப்புகளையும் கொண்டுவரமுடியாது. அது அவரால் இயலும் இயலாது. சமீபதாதில் மத்தியபிரதேச முதல்வர் இங்குள்ள முதலீட்டாளர்களை மதாதியபிரதேசத்திற்கு சத்தமில்லாமல் அழைத்துச்செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டு சென்றுவிட்டார். இருக்கும் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தக்கவைத்துக்கொள்ள இயலாதவர் , புது முதலீட்டாளர்களை அழைக்க அமெரிக்கா சென்றுள்ளது நம்பும்படியாக இல்லை. அமெரிக்காவுக்கு இவர் சென்ற உண்மையான காரணம் நல்லபடியாக நடக்கட்டும்


Mr Krish Tamilnadu
ஆக 30, 2024 14:24

கிளம்பும் முன் எதிர்கட்சிகளுடன் புரிந்துணர்வு மீட்டிங் வைத்து இருந்து இருக்கலாம். இந்த இடங்களில் தொழில்சாலை அமைக்க, இந்த வகையான தொழில் ஈர்ப்புக்கு ப்ளான் செய்கிறோம் என. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வயதானவர்கள் சாரி வேலையில்லாத தகுதியான ஆட்கள் லிஸ்ட்டை தயார் செய்து பரிந்துரையும் வழங்குங்கள். இடம், இயற்கை வளம், மாசுபாடு அக்கறை எதிர்கட்சிக்களின் சொத்து ஆயிற்றே. அவர்களுடன் புரிந்துணர்வு அவசியம் அல்லவா?


GMM
ஆக 30, 2024 13:09

தமிழக மாநில முதல்வர் வெளிநாட்டு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடி மற்றும் அமெரிக்கா தேசிய கொடி இடம் பெறலாமா? மாநில முதல்வர் நாட்டின் தலைவர் அல்ல. பிரதமர், ஜனாதிபதி க்கு மட்டும் தான் அரசு மரியாதை பொருந்தும். இந்தியாவில் பிரிவினை வளர்க்கும் செயல்? அமெரிக்கா , இந்தியா அரசு மீது UN சபையில் புகார் தெரிவிக்க வேண்டும். முதுகெலும்பு இல்லாத மன்றம், மத்திய அரசு?


Matt P
செப் 01, 2024 10:56

மாநில அமைச்சர்கள் காரில் தேசியகொடியை பறக்க விடலாம் என்றால் வெளிநாட்டில் ஏன் இது போன்ற கூட்டங்களில் தேசிய கொடியை பயன்படுத்த கூடாது. மத்திய அமைச்சர்களானாலும் மாநில அமைச்சர்களானாலும் வெளிநாட்டுக்கு அரசு அலுவலஆக சென்றாள் இந்திய நாட்டின் பிரதிகள் தான்.


ஆரூர் ரங்
ஆக 30, 2024 12:54

இந்த ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து விட்டுத்தான் கையெழுத்திட்டாரா? எதுவுமே சின்ன ஷீட் இல்லை. ஏராளமான பக்கங்கள் ?


Just imagine
ஆக 30, 2024 12:53

போட்டோவில் இருவர் மட்டுமே அமெரிக்கர்களாக தென்படுகிறார்கள் 15ந்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்களாக தென்படுகிறார்கள் , என்ன பித்தலாட்டம் இது .....


kulandai kannan
ஆக 30, 2024 12:18

எல்லாம் செட்டப் போல் தெரிகிறதே. எல்லோரும் நம்மூர் முகங்களாகவே உள்ளனர்.


jaya
ஆக 30, 2024 12:28

சந்தேகம் வேறா ?


ஆரூர் ரங்
ஆக 30, 2024 12:07

ஆனா சொந்த கட்சி எம்பி இலங்கையில்தான் அதுவும் சீனாக்காரன் கட்டுப்பாட்டில் உள்ள சிங்களப் பகுதியில் 26000 கோடி முதலீடு? ஆக திமுக காரர்கள் கறுப்புப்பணத்தையெல்லாம் கைப்பற்றினால் அன்னிய முதலீட்டுக்கு அலைய வேண்டாமே.ஒரே பிரச்னை. சுப்ரீம் கோர்ட் பொன்முடி கேஸைப் போல திடீரென சுபம் போட்டு விடலாம்.( PERMANENT?) BAIL IS THE RULE.


சமீபத்திய செய்தி