உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வடகொரியாவில் கடமை தவறிய 30 பேருக்கு துாக்கு

வடகொரியாவில் கடமை தவறிய 30 பேருக்கு துாக்கு

சியோல் வடகொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை தடுக்கத் தவறிய 30 அதிகாரிகளுக்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.கிழக்கு ஆசியாவில் உள்ள வடகொரியா, மர்மம் நிறைந்த நாடு. அங்கே என்ன நடக்கிறது என்று வெளி உலகத்துக்கே முழுமையாக தெரியாது. கிம் ஜாங் உன், 40, அதிபர் பதவியில் இருக்கிறார். அவர் சர்வாதிகாரி. அவரை கேள்வி கேட்கும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.

கொரோனா தொற்று

கொரோனா கால கட்டத்தில், உலகம் முழுதும் தொற்று பரவி லட்சக்கணக்கான மக்கள் மரணம் அடைந்தபோது, வடகொரியாவில் நோயின் பாதிப்பு குறித்த ஒரு தகவல் கூட வெளிவரவில்லை. சீனா மட்டுமே வட கொரியாவுக்கு நெருக்கமான நாடு என நம்பப்படுகிறது. அதிபர் கிம் எதை பற்றியும் கவலைப்படாமல், அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்டவற்றை அச்சுறுத்தும் வகையில், அவ்வப்போது அணு ஆயுதச் சோதனையும் நடத்தி வருகிறார். அமெரிக்காவை அவ்வப்போது மிரட்டுவதும் அவருக்கு வாடிக்கை. இந்நிலையில், வட கொரியாவில் மழையால் நேர்ந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை தடுக்கத் தவறியதற்காக, 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மழை பெய்தது ஜூலை மாதத்தில். சினுய்ஜு, உய்ஜு ஆகிய நகரங்களில், 4,000 வீடுகள், கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை வெள்ளம் சூழ்ந்ததாக, வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்தது.

1,000 பேர் பலி

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில், 1,000 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,000க்கும் மேற்பட்டோர், தலைநகர் பியோங்யாங்கில் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் கிம் நேரில் பார்வையிட்டார். ஓய்வு எடுக்காமல் நிவாரணப் பணிகளை நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எனினும், வெள்ளத்தால் ஆயிரக்கணக்கில் பலி ஏற்பட்டதாக வெளியான செய்திகளை கிம் மறுத்தார். இது, நம் நாட்டுக்கு சர்வதேச அளவில் இருக்கும் நல்ல பெயரை கெடுக்க, வழக்கம் போல மேலை நாடுகளும், தென் கொரியாவும் கைகோர்த்து பரப்பும் வதந்திகள் என அவர் குற்றஞ்சாட்டினார்.

அதிகாரிகள் பீதி

நிவாரணப் பணிகள் முடிந்தபின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கிம், அதிகாரிகள் தமது கடமையை செய்ய தவறியதாலும், லஞ்ச பணத்துக்கு ஆசைப்பட்டு ஊழல் செய்ததாலுமே மழை வெள்ள பாதிப்பை தடுக்க முடியாமல் போயிற்று என குறிப்பிட்டார். தவறு செய்த அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் எச்சரித்தார். அதிலிருந்தே அதிகாரிகள் பீதியில் உறைந்திருந்தனர்.ஊழல் செய்த மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகள் 30 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆகஸ்ட் இறுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தண்டனைகளை பொதுமக்கள் பார்க்கும் வகையில் பகிரங்கமாக நிறைவேற்ற வேண்டும் என்பது தான் கிம் பின்பற்றும் கொள்கை. அப்படி செய்தால் மட்டுமே மற்றவர்கள் மனதில் பயம் உண்டாகும்; தவறு செய்ய தயங்குவர் என்பார்.

மரண தண்டனை

கண்களை கட்டி நிற்க வைத்து சுட்டுக் கொல்வது, மேடை மேல் ஏற்றி துாக்கில் போடுவது என பல வழிகளில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. முப்பது அதிகாரிகளும் ஒரே பாணியில் கொல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அதிகாரிகள் தண்டிக்கப்பட்ட தகவலை, தென் கொரியாவின் 'சோசன் டிவி' உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வடகொரியா ஊர்ஜிதம் செய்யாமலும், மறுக்காமலும் வழக்கம் போல மவுனம் காக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலும் பகிரங்கமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. வட கொரியாவில் ஆண்டுக்கு, 100 பேர் வாழ்க்கை அந்த வழியில் முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ravi
செப் 12, 2024 10:31

நம்ம விடியல்கிட்ட கொடுக்கலாம்


s sambath kumar
செப் 05, 2024 17:13

இந்த பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கொண்டு முழிப்பதை விட சாவதே மேல்.


Narayanan
செப் 05, 2024 15:03

இயற்கை சக்தியின் முன் யாரும் ஒன்றும் செய்யமுடியாது . அது புத்தியுள்ளவன் மட்டுமே அறிவான் . அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டார்கள் . அதனால் தூக்கிலிடப்பட்டார்கள் என்றல் அது சரிதான் . ஒன்று மட்டும் உறுதி மனிதன் எங்கு இருந்தாலும் அவனின் செயல்பாடுகள் ஒரே மாதிரிதான் இருக்கிறது . சர்வாதிகாரம் ரொம்ப நாள் நிற்காது . விரைவில் இறைவனின் எண்ணம் மாறட்டும்


சமூக நல விரும்பி
செப் 05, 2024 14:52

மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தும் கேரளா வயநாடு சம்பவத்தை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது யார் தவறு.


aaruthirumalai
செப் 05, 2024 14:22

இங்க ஒருத்தன் கூட மிஞ்ச மாட்டான் தூக்கு மேடை பத்தவே பத்தாது.


Corporate Goons
செப் 05, 2024 13:18

நாட்டை மக்களை பற்றி கவலைப்படாமல் , மோடி, பா ஜ , கார்போரேட்டுகள், மோடி கும்பலுக்கு மட்டுமே வேலை செய்யும் சிபிஐ , ED, நீதிபதிகளையெல்லாம் என்ன செய்யலாம் ?


VENKATASUBRAMANIAN
செப் 05, 2024 13:13

இதுபோன்று இல்லாவிட்டாலும் கடுமையான தண்டனை இந்தியாவில் அமுல் படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள். லஞ்சம் வாங்க பயம் ஏற்படும். இப்போது எந்த கவலையும் இல்லை சஸ்பெண்டு செய்வார்கள். வழக்கு வருடக்கணக்கில் நடக்கும்.


krishnamurthy
செப் 05, 2024 11:45

இங்கும் உது உடனடி தேவை


vijay
செப் 05, 2024 10:38

மனநிலை சரியில்லாத கொடுங்கோலன். மக்களுக்கான கடமையை செய்யவே செய்யாத இவனுக்கு அல்லவா மரணதண்டனை கொடுக்கணும். அது சரி, தனக்குத்தானே மரணதண்டனை கொடுத்துக்கொள்ள முடியாதல்லவா?. ஒருவேளை எதிர்கால அதிபராக வரவிருக்கும் இந்த ஆளின் மகள் தன்னுடைய குடும்ப நபர்கள், முப்பாட்டன் முதற்கொண்டு தந்தை வரை செய்த கேலிக்கூத்துக்கள், கொடூரங்கள் ஆகியவற்றை நிறுத்தி மக்களுக்கு நல்லது செய்து உலகநாடுகளுடன் இணைந்து நாட்டிற்கு நல்லது செய்தால், வடகொரிய மக்களே மகிழ்ச்சியுடன் வரவேற்று அவரை ஒரு "கடவுளாகவே" போற்றுவார்கள். மக்களுக்கு நல்லது செய்து அவர்களின் மரியாதை பெறுவதை விட்டுட்டு பயம்காட்டி மரியாதையை பெற்றுவது கேவலமோ கேவலம், அவலம். பார்ப்போம், குடும்ப வழியே மகளும் கொடுங்கோல் ஆட்சி நடாத்துவாரா இல்லை நல்லது செஞ்சு நல்லாட்சி நடத்தி முதன்முதலா புரட்சி செய்வாரா?


sridhar
செப் 05, 2024 10:28

இவன் மனிதனாக நடக்க தவறினானே , இவனையும் தூக்கில் போடுங்க .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை