உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவில், ஆற்றில் மூழ்கி, நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர்.மஹாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த, 18 - 20 வயதுக்குட்பட்ட ஹர்ஷல் அனந்த்ராவ் தேசாலே, ஜிஷான் அஷ்பக் பிஞ்சாரி, ஜியா பிரோஜ் பிஞ்சாரி, மாலிக் குலாம்கஸ் முகமது யாகூப், பூபேஷ் சோனாவனே ஆகியோர், ரஷ்யாவின் வெலிகி நோவ்கோரோட் நகரில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலையில் மருத்துவம் படித்து வந்தனர்.இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே, வோல்கோவ் ஆற்றில் ஐந்து மாணவர்களும் சமீபத்தில் குளித்தனர். அப்போது, மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கினார்.அவரை காப்பாற்றச் சென்ற மற்ற மூன்று மாணவர்களும் நீரில் மூழ்கினர். இதில், நான்கு மாணவர்களும் உயிரிழந்தனர். மாணவி பூபேஷ் சோனாவனே மட்டும் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டார்.'உயிரிழந்த மாணவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.'மீட்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, மாஸ்கோவில் உள்ள நம் நாட்டு துாதரகம் தெரிவித்துள்ளது.வோல்கோவ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு இந்திய மாணவர்களில், ஜிஷான் அஷ்பக் பிஞ்சாரியும் ஒருவர். மற்ற மூன்று மாணவர்கள் ஆற்றில் மூழ்கிய போது, அவர் பெற்றோருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாக குடும்ப உறவினர் தெரிவித்துள்ளார். ஆற்றில் இறங்க வேண்டாம் என அஷ்பக் பிஞ்சாரியிடம் பெற்றோர் கூறியதாகவும், அதை மீறி அவர் ஆற்றில் இறங்கி உயிரிழந்ததாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
ஜூன் 08, 2024 07:35

ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 08, 2024 04:55

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் ஷாந்தி.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை