உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி

மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி

போர்ட் லூயிஸ்: 'அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். மொரீஷியஸ் பிரதமர் நவின் ராமகூலம் மற்றும் பிரதமர் மோடி சந்தித்து பேசினர். பின்னர் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rq73kg38&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொரீஷியஸின் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மொரீஷியஸின் பொருளாதாரத்தின் பாதுகாப்பைப் பராமரிப்பதில் நாங்கள் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளோம். கடலோரக் காவல்படையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் ஒத்துழைப்போம்.இந்தியாவும் மொரீஷியஸும் இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளனர். பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பயணத்தில் நாங்கள் பங்காளிகள். நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணை நின்றுள்ளோம். அது சுகாதாரம், விண்வெளி அல்லது பாதுகாப்பு எதுவாக இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் முன்னேறி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள். 140 கோடி இந்தியர்களின் சார்பாக, மொரிஷியஸின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தினத்தை பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.விருது வழங்கி கவுரவிப்புமொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் வழங்கி கவுரவித்தார்.இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். இதன் வாயிலாக, மோடி, 21வது சர்வதேச கவுரவ விருதைப் பெற்று உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

अप्पावी
மார் 12, 2025 19:39

அங்கே இருப்பதே 12, 13 லட்சம் பேர்தான். அதில் 5 லட்சம்.பேருக்கு டிரெய்னிங்னு யாரோ துண்டு சீட்டில் இந்தியில் எழுதிக் குடுத்துட்டாங்க. படிச்சிட்டாரு. அந்நாட்டின் பெரிய அவார்டும் குடுத்துட்டாங்க


வெக்குளி
மார் 12, 2025 22:37

மூன்றாம் தர மனிதனின் மூன்றாம் தர கருத்து.....பாவி


Palanisamy T
மார் 12, 2025 17:48

பயிற்சிக் கொடுப்பது நல்லதுதான். இதையெல்லாம் மறந்து ஒருவேளை நாளை இவர்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது இது இவர்களின் குணம்.


V L VENKATESAN
மார் 12, 2025 14:59

மயூரிட்டிஸ் மொத்த மக்கள் தொகை 12 லட்சம் மட்டுமே


முக்கிய வீடியோ