உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (வயது 20) என்ற நபர் சுட்டார். இவர் பயன்படுத்திய ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி மிகவும் ஆபத்தானது என தெரியவந்துள்ளது. ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி பயன்பாடு என்ன ? எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் பின்வருமாறு: * ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி, 1950ம் ஆண்டு அர்மாலைட் (ArmaLite) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த துப்பாக்கி மிகவும் ஆபத்தானது. * ராணுவ வீரர்களும் பயன்படுத்தும் வகையில் அதி நவீன வசதியுடன் கூடியது. . * இந்த துப்பாக்கி பெரும்பாலும் போட்டிகள் மற்றும் வேட்டையாடுதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. * ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியில் இருந்து பாயும் புல்லட்டின் வேகம் அதிகம். குறி வைக்கும் பகுதியை விரைவில் சென்று அடையும். * ஒரு நொடியில் ஆறு கால்பந்து மைதானங்களை கடக்கும் வேகத்தில், புல்லட் வேகமாக பாய்ந்து குறிவைக்கும் நபரை கொல்லும் சக்தி கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்