உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மணிக்கு ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும் பறக்கும் ரயில்; சோதித்துப் பார்க்கிறது சீனா

மணிக்கு ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும் பறக்கும் ரயில்; சோதித்துப் பார்க்கிறது சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: மணிக்கு ஆயிரம் கி.மீ., வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை, சீனா சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ., தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் புல்லட் ரயில் மூலம் பீஜிங்கிலிருந்து- ஷாய்காய்க்கு 4 மணி நேரம் 18 நிமிடத்தில் செல்ல முடியும். புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்கிறது. தற்போது, அதிவேக பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் சீனா, மணிக்கு ஆயிரம் கி.மீ., வேகத்தில் பயணிக்கும் ரயிலை அறிமுகம் செய்ய களத்தில் இறங்கி உள்ளது. சீன அரசின் தகவல் அலுவலகம் இதை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சோதனை வெற்றி

தற்போது 2 கி.மீ துாரம் வரை நடத்தப்பட்ட சோதனையில், ரயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஹைப்பர் லூப் திட்டம் என்று அழைக்கப்படும் அதிக வேக பறக்கும் ரயிலை ஷாங்க்சி மாகாண அரசு மற்றும் சீனா எரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கி உள்ளது. வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு பதிலாக, ரயில் தரையில் பறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கி உள்ளோம் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

VG TAMIZHARASON TAAMIZH
ஆக 11, 2024 14:37

நாங்களும் வருவோம் 500 கிலோ மீட்டர் வேகத்தில்


Gokul Krishnan
ஆக 11, 2024 08:24

அதே போல் சீனாவில் அரசுக்கு எதிராக இப்படி கருத்து பதிவிட முடியாது


venugopal s
ஆக 10, 2024 23:51

இங்கே நூற்றுமுப்பது கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத்தை இப்போது தான் விட்டு விட்டு சீனாவுக்கு நாங்கள் தான் போட்டி என்று மார் தட்டிக் கொண்டு இருக்கிறது ஒரு வெட்டிக் கூட்டம்!


MADHANRAJ MURUGESAN
ஆக 11, 2024 10:01

நீ இப்படியே சொம்படிச்சிகிட்டு இரு.


God yes Godyes
ஆக 10, 2024 18:56

சொட்ட மூக்கனுங்க ரீல் வுடறவனுங்க ரயில் வேகத்தை கூட்ட தெரிஞ்சவங்க ஒரு விநாடிக்கு மூன்று தடவை மூச்சை இழுத்து விடுவதை இருபது தடவை இழுத்து விடுவான்களா.


R S BALA
ஆக 10, 2024 16:42

எதிலும் வேகம் என்பது விவேகமல்ல.. வேகமும் விபத்தும் எப்போதும் உற்ற தோழர்கள், பயணிகள் தனது உயிரை ..... நினைத்தால் பயணிக்கலாம்.


R.P.Anand
ஆக 10, 2024 15:47

, ரெண்டு கிலமீட்டர் என்ன சோதனை நடத்த முடியும். குரஞ்சது 50கிலோமீட்டர் நடதினா அதுதான் சரி.


N.Purushothaman
ஆக 10, 2024 15:36

பார்த்துலே ..ஷாங்காய்க்கு போறதுக்கு பதிலா கொரியாவுக்கு போயிட போவுது ...


Uppili
ஆக 10, 2024 14:33

Public will not know what Govt of India is doing on various projects of National importance. Some are publicized and some are not . Soon public will know about thus high speed train project. 600km per hour combining linear propulsion and levitation.


Kumar Kumzi
ஆக 10, 2024 17:13

டாட் இந்தியா கம்பெனி எங்கய்யா ஆட்சியை நடத்த உடுறானுங்க


Suresh
ஆக 10, 2024 14:16

But if we try Vandhe Bharath someone will through stone on it here.


P. VENKATESH RAJA
ஆக 10, 2024 12:36

சீனா டெக்னாலஜி எங்கேயோ போய்விட்டது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை