வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிரிட்டனே இப்போது பயங்கரவாதநாடுதானே! அடுத்த பாகிஸ்தான்…
லண்டன்; பிரிட்டனில் 19 முக்கிய ரயில் நிலையங்களில் ஹேக்கர்'கள் எனப்படும் சட்டவிரோத இணைய ஊடுருவல் குழு, 'சைபர்' தாக்குதல் நடத்திய சம்பவம் அந்நாட்டில் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டனில் அனைத்து ரயில் நிலையங்களில் வைபை இணைய தள இணைப்புகள் உள்ளன. வெகு தொலைவில் பயணிப்பவர்கள் ரயில்களில் வைபை வசதியினை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று பிரிட்டனில் முக்கிய ரயில்களில் திடீரென வைபை சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் தங்களின் மொபைலில் ஆன்லைன் வாயிலாக நெட்ஓர்க் கிடைக்காமல் அவதியுற்றனர்.இது தொடர்பாக பிடிஎஸ். எனப்படும் பிரிட்டன் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியதில், பிரிட்டனில் லண்டன் யூஸ்டன், மான்செஸ்டர், லிவர்பூல், பர்மிங்ஹாம் , கிளாஸ்கோ உள்ளிட்ட 19 ரயில் நிலையங்களில் வைபை சேவை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இது இணையதள ஹேக்கர்களின் சைபர் தாக்குதல் எனவும், இதில் பயங்கரவாதிகளின் சதி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரிட்டனே இப்போது பயங்கரவாதநாடுதானே! அடுத்த பாகிஸ்தான்…